வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தேனி,-மதுரை - தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மே 27 முதல் இயக்குவதற்கான கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுரை - தேனி அகல ரயில் பாதை அமைக்க ஏதுவாக 2011 ஜன., 1 முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது பணிகள் முடிந்ததையடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை பிரதமர் மோடி மே 26 சென்னையில் இருந்து காணொலி மூலம் துவக்குகிறார்.
மே 27 முதல் தினசரி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் காலை 8:30 மணிக்கு புறப்பட்டு வடபழஞ்சியில் காலை 8:45க்கும், உசிலம்பட்டியில் 9:05க்கும், ஆண்டிபட்டியில் 9:20க்கும் புறப்பட்டு தேனிக்கு காலை 9:35 மணிக்கு வரும். தேனியில் மாலை 6:15 மணிக்கு புறப்பட்டு ஆண்டிபட்டியில் 6:29க்கும், உசிலம்பட்டியில் 6:47க்கும், வடபழஞ்சியில் இரவு 7:05க்கும் புறப்பட்டு மதுரைக்கு 7:35 மணிக்கு செல்லும் என ரயில்வே அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE