அண்ணாமலை சொந்த ஊருக்கு வர முடியாது; அமைச்சர் பன்னீர்செல்வம் பகிரங்க மிரட்டல்

Updated : மே 24, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (58) | |
Advertisement
கடலுார் : 'தி.மு.க.,வுக்கு சவால் விடும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சொந்த ஊரான கரூருக்குகூட வர முடியாது' என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.'பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால், கோட்டையை முற்றுகையிடுவோம்' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.இந்நிலையில், அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில், கடலுார் மாவட்டம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கடலுார் : 'தி.மு.க.,வுக்கு சவால் விடும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சொந்த ஊரான கரூருக்குகூட வர முடியாது' என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.'பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால், கோட்டையை முற்றுகையிடுவோம்' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார்.



latest tamil news



இந்நிலையில், அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில், கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் நேற்று முன்தினம் இரவு நடந்த தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக வேலை பார்த்தபோது, தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தரக்கூடாது என பேசினார். தற்போது, தமிழகத்தின் மீது அக்கரை உள்ளவர்போல் பேசுகிறார்.தமிழக முதல்வருக்கு, 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என, சவால் விடுகிறார்.


latest tamil news


ஸ்டாலின் பல்வேறு சவால்களை சந்தித்துதான் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார்.முதல்வருக்கு சவால் விட அவருக்கு தைரியம் எங்கிருந்து வந்தது. அண்ணாமலையின் சவால் ஸ்டாலினுக்கு சாதாரணம். சொந்த ஊரான கரூருக்கு கூட அண்ணாமலையால் வர முடியாது. உங்க மாவட்டத்திற்கு வாங்க பார்க்கலாம்.அண்ணாமலை தமிழகத்தில் மதக்கலவரத்தை துாண்டுகிறார். மத்தியில் அவர்கள் பிரதமராக இருந்தால், தமிழகத்தில் எங்களுக்கு என்ன. அதுபற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம். இந்த சவால்களை எல்லாம் பார்த்து வளர்ந்த கட்சிதான் தி.மு.க.,இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-202218:10:31 IST Report Abuse
Venugopal S சபாஷ்,சரியான போட்டி.ஊரில் இரண்டு ரௌடிகளின் மோதலை வேடிக்கை பார்ப்பதில் ஒரு தனி சுகம் உள்ளது.அதிலும் புதிதாக வந்துள்ள இளையவரான முந்நாள் போலீஸ் இந்நாள் ரௌடி டஃப் ஃபைட் கொடுக்கிறார்.
Rate this:
Cancel
24-மே-202216:28:11 IST Report Abuse
theruvasagan அலர்ட் ஆறுமுகம் ரொம்பவும் பயந்துட்ட மாதிரி தெரியுதே. வடிவேலு மாதிரியே தைரியம் இருந்தா என்னோட ஏரியாவுக்குள்ள நுழைவியா பார்க்கலாம்னு சவால் விட்டுக்கொண்டே ஜகா வாங்குற மாதிரியில்ல இருக்கு.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
24-மே-202212:12:43 IST Report Abuse
Raj 'பெட்ரோல், டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால், கோட்டையை முற்றுகையிடுவோம்' சரி தான் அவர் முற்றுகை இட வேண்டியது செங்கோட்டையை
Rate this:
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
24-மே-202213:28:35 IST Report Abuse
sridharஎல்லாவற்றிற்கும் அவரு அங்கேயே போகணும்னா அப்போ நீங்க எதுக்கு பாஸ் பேசாம செங்கோட்டையை இத பாத்துக்குமே நீங்க தேவையே இல்லையே எப்புடி...
Rate this:
sridhar - Chennai,இந்தியா
24-மே-202213:49:50 IST Report Abuse
sridharசெங்கோட்டை குறைத்துவிட்டது, இந்த மர கோட்டை தான் இன்னும் குறைக்கலை . முரசொலி படித்து பாழாகாதே ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X