சித்துவுக்கு பரிசோதனை

Added : மே 24, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
பாட்டியாலா,-பஞ்சாபின் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்.,கின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, உடல் பரிசோதனைக்காக பாட்டியாலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.பஞ்சாபில், 1988ல் நடந்த தெரு சண்டையில், நவ்ஜோத் சிங் சித்து, ஒருவர் முகத்தில் குத்தியதில் உயிரிழந்தார். இந்த வழக்கில், அவருக்கு ஓராண்டு சிறைத்
சித்துவுக்கு பரிசோதனை

பாட்டியாலா,-பஞ்சாபின் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்.,கின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, உடல் பரிசோதனைக்காக பாட்டியாலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பஞ்சாபில், 1988ல் நடந்த தெரு சண்டையில், நவ்ஜோத் சிங் சித்து, ஒருவர் முகத்தில் குத்தியதில் உயிரிழந்தார். இந்த வழக்கில், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சித்து கடந்த வாரம் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவருடைய வழக்கறிஞர் எச்.பி.எஸ்.வர்மா கூறியதாவது:சிறையில் தனக்கு சிறப்பு உணவு வழங்கும்படி, சித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கோரிக்கை குறித்து பரிசீலித்த சிறை அதிகாரிகள், மருத்துவப் பரிசோதனைக்கு பரிந்துரைத்தனர். இதன்படி, சித்து போலீஸ் பாதுகாப்புடன் பாட்டியாலா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை மருத்துவர் குழு பரிசோதித்து அளிக்கும் அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
24-மே-202219:54:48 IST Report Abuse
Vena Suna கொலை நடந்து 34 வருடங்கள் கழித்து தீர்ப்பு....அருமை...நீதிபதிகள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-மே-202218:42:15 IST Report Abuse
Girija பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது, அன்னத்தை பழித்தவருக்கு அன்னம் கிடைக்காது, தமிழ் மூத்தோர் சொல் . தமிழ்நாட்டு உணவை பழித்த உனக்கு கை மேல் கூலி கிடைத்ததா ? இந்து கடவுளை பழிக்கும் இங்கு உள்ளவர்கள் கூலி பெற கியூவில் உள்ளனர்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
24-மே-202218:38:13 IST Report Abuse
Girija பாக்கிஸ்தானில் ஸ்விகி உள்ளதாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X