குடகனாற்றில் கண்ணுக்கெட்டிய துாரம் வரை கருவேலங்கள்

Added : மே 24, 2022 | |
Advertisement
வேடசந்துார், ஆத்துார் தாடிக்கொம்பு வழியாக செல்லும் குடகனாறு கண்ணுக்கெட்டிய துாரம் வரை கருவேல முட்கள் நிறைந்து காடாய் காட்சியிளிக்கின்றன. இவற்றை பராமரிக்காது விட்டதால் குடகனாறு அணைக்கு கழிவுநீருடன் நீர் கலந்து வர, நிலத்தடி நீருக்கு வேட்டு வைப்பதோடு விவசாயமும் பாழ்பட்டு போனது.குடகு மலையில் உருவாகி வரும் குடகனாறு ஆத்துார், தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக
குடகனாற்றில் கண்ணுக்கெட்டிய துாரம் வரை கருவேலங்கள்


வேடசந்துார், ஆத்துார் தாடிக்கொம்பு வழியாக செல்லும் குடகனாறு கண்ணுக்கெட்டிய துாரம் வரை கருவேல முட்கள் நிறைந்து காடாய் காட்சியிளிக்கின்றன. இவற்றை பராமரிக்காது விட்டதால் குடகனாறு அணைக்கு கழிவுநீருடன் நீர் கலந்து வர, நிலத்தடி நீருக்கு வேட்டு வைப்பதோடு விவசாயமும் பாழ்பட்டு போனது.குடகு மலையில் உருவாகி வரும் குடகனாறு ஆத்துார், தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக அழகாபுரியில் உள்ள குடகனாறு அணைக்கு செல்கிறது. இந்த ஆற்றின் வழிநெடுகிலும் கருவேல முட்கள் அடர்ந்து காணப்படுகின்றன.

குறிப்பாக லட்சுமணன்பட்டி நால் ரோட்டில் இருந்து அழகாபுரி அணைப் பகுதி செல்லும்வரை குடகனாற்றுக்குள் யாரும் இறங்க முடியாதப்படி புதர்களுடன் கருவேலங்கள் சூழந்துள்ளன. ஒருகாலத்தில் வற்றாத ஜீவ நதி போல் மணல் பாங்காய் ஓடித்திரிந்த குடகனாறு, இன்று கழிவு நீர் ஓடும் கால்வாயாக மாறி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. குடகனாறு எவ்வழியோ அவ்வழியே குடகனாறு அணை பகுதியும் அமைந்துள்ளது.

இங்கும் கருவேல முட்கள் மரங்களாய் வளர்ந்துள்ளன. தற்போது அணையில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் முட்கள் அனைத்தும் அழுகிய நிலையில் தெரிகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு சமையல் காஸ் பயன்பாடு அதிகம் இல்லாத காலத்தில் அடுப்பு கரி மூட்டம் போடும் பழக்கம் அதிகம் இருந்த காலத்தில், குடகனாற்றில் கருவேல முட்கள் குறைந்திருந்தன. தற்போது கண்ணுக்கெட்டிய துாரம் வரை கருவேலங்கள் சூழ காடாய் காட்சியளிக்கிறது குடகனாறு. இவற்றை அகற்றி மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் தடையின்றி வரும் வகையில் இவற்றை சுத்தப்படுத்தவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாக உள்ளது.



அணைக்கு வருவதும் கழிவுநீர்



ராஜகோபால், மாவட்ட விவசாய அணி செயலாளர், திருக்கூர்ணம்: குடகனாறு அணைப்பகுதி கருவேல முட்கள் கூடாரமாய் காட்சியளிக்கிறது. ஆலைக் கழிவுகள், வேடசந்துாரின் ஒட்டுமொத்த கழிவுநீர் கலப்பதால் குடகனாறு மாசுபட்டு விட்டது. குடகனாறு அணையில் திறந்து விடப்படும் நீர், கழிவு நீராக உள்ளதால் விவசாயத்திற்கு பயன்பாடின்றி உள்ளது. தற்போது அந்த தண்ணீரையும் தேக்கி வைத்து உள்ளனர். குடகனாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை அதிகாரிகள் தடுக்க நடவடிக்கை எடுக்காத நிலையில், இதுபோன்ற செய்திகள் வெளியே வந்தால் அவர்களுக்கான அறுவடை காலமாக மாறி விடுகிறது.



என்ன பயன்



சதாசிவம், சமூக ஆர்வலர், வேடசந்துார்: சமூக விரோதிகளின் கூடாரமாக கொசுக்களின் அடைக்கலமாக குடகனாறு மாறியுள்ளது. குடகனாற்று நீரால் விவசாயம் பாழ் பட்டுவிட்டது. இவற்றையெல்லாம் சரிசெய்யாமல் அடுத்தடுத்து ஷட்டர்களை சரி பண்ணுவதாகவும் காய்வாய்களை சரி செய்ததாகவும் கூறி ரூ.கோடிகளை ஒதுக்குகின்றனர். தற்போது கூட ஷட்டர், கால்வாயை சரி செய்ய ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளனர், நிதியை வீணடிக்காமல் ஆக்கபூர்வமான பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X