அ.தி.மு.க., கோட்டை... ஆளும்கட்சி தேர்தல்ல வசூல் வேட்டை!

Updated : மே 27, 2022 | Added : மே 24, 2022 | |
Advertisement
ராகி பக்கோடா, இஞ்சி டீயைச் சுவைத்துக்கொண்டே, வீட்டில் செய்தி சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, 'காலிங் பெல்' சத்தம் கேட்டு வெளியே வந்தாள். வாசலில் சித்ரா... ஆச்சரியத்தோடு வரவேற்றாள் மித்ரா.''அக்கா...வாங்க வாங்க...என்னக்கா சி.எம்., சென்னையில டவுன்பஸ்ல ஏறுனது மாதிரி 'சர்ப்ரைஸ்'சா வந்து நிக்கிறீங்க...?''''ஒரு வேலையா ரேஸ்கோர்ஸ்
 அ.தி.மு.க., கோட்டை... ஆளும்கட்சி தேர்தல்ல வசூல் வேட்டை!

ராகி பக்கோடா, இஞ்சி டீயைச் சுவைத்துக்கொண்டே, வீட்டில் செய்தி சேனல்களை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்த மித்ரா, 'காலிங் பெல்' சத்தம் கேட்டு வெளியே வந்தாள். வாசலில் சித்ரா... ஆச்சரியத்தோடு வரவேற்றாள் மித்ரா.

''அக்கா...வாங்க வாங்க...என்னக்கா சி.எம்., சென்னையில டவுன்பஸ்ல ஏறுனது மாதிரி 'சர்ப்ரைஸ்'சா வந்து நிக்கிறீங்க...?''

''ஒரு வேலையா ரேஸ்கோர்ஸ் வந்தேன்...அப்பிடியே உனக்கும் ஒரு 'சர்ப்ரைஸ்' கொடுக்கலாம்னு வண்டியை இங்க விட்டுட்டேன்...ஏதோ சொன்னியே... சென்னையில சி.எம்.,டவுன்பஸ்ல ஏறுன மாதிரின்னு...நம்ம ஊருல சி.எம்., டவுன்பஸ்ல ஏறிருந்தா, அவருக்குக் கிடைச்ச வரவேற்பே வேற மாதிரி இருந்திருக்கும்!''பதிலுடன் புதிர் போட்டபடியே வீட்டிற்குள் வந்த சித்ராவுக்கு, பக்கோடாவும், டீயும் கொடுத்து உபசரித்த மித்ரா, ''அதென்னக்கா வேற மாதிரி வரவேற்பு?'' என்று ஆர்வமாய்க் கேட்டாள்.

''ஆமா மித்து! சென்னையில மெட்ரோ ரயில் இருக்கு; எலக்ட்ரிக் டிரெயின் இருக்கு; டவுன்பஸ்கள் ஓடுது...நம்ம ஊர்ல இருக்குறதே பஸ் வசதி மட்டும்தான். அதுலயும் பாதி பிரைவேட் பஸ்கள். லேடீஸ்க்கு இலவச பயணம்னு அறிவிச்சிட்டு, வேலைக்கும், காலேஜ்க்கும் போற வர்ற நேரத்துல, சாதாரண கட்டண டவுன்பஸ்களை சுத்தமா குறைச்சுட்டு, சிகப்பு பஸ் மட்டும்தான் அதிகமா விடுறாங்க!''

''உண்மைதான்க்கா...நானே பல முறை பாத்திருக்கேன்...லேடீஸ் பல பேரு, கரெக்டான நேரத்துக்கு, காலேஜ்க்கும், வேலைக்கும் போகணும்னு வேற வழி இல்லாம, சொகுசு பஸ்ல ரெண்டு மடங்கு டிக்கெட் காசு கொடுத்துத்தான் போறாங்க. ஒரு டிரிப் ஓசியில போனா, அடுத்த டிரிப்ல அதுக்கும் சேர்த்து காசைப் பறிச்சிர்றாங்கன்னு நிறைய லேடீஸ் புலம்புறாங்க!''

''அதேதான்...இந்த லட்சணத்துல சிட்டிக்குள்ள ஏகப்பட்ட மினி பஸ்களுக்கு 'ஸ்டாப்பேஜ்' கொடுக்காம ஆர்.டி.ஓ.,க்கள் முடக்கி வச்சிருக்காங்க. பாலம் வேலை நடந்தப்போ, ரோடு சரியில்லைன்னு ஓனர்களா நிறுத்துன பஸ்களை இப்போ ஓட்டுறதுக்குத் தயாரா இருந்தும், முறையா 'பர்மிஷன்' தராம, ஆர்.டி.ஓ.,க்கள் இழுத்தடிக்கிறாங்க!''

''வேற ஏதாவது எதிர்பார்ப்பாங்க...நம்ம ஊரு ஜே.டி.சி.,கிட்டதானே28 லட்ச ரூபா 'லம்ப்'பா பறிமுதல் பண்ணுனாங்க. அதெல்லாம் இந்த ஆர்.டி.ஓ.,க்கள் வாங்கிக் கொடுத்த காசுதானே...அவருக்கு அவ்ளோ கொடுக்க இவுங்க எவ்ளோ வசூல் பண்ணிருப்பாங்க... அவரைப் பிடிச்ச பிறகு, கொஞ்ச நாளைக்கு அடக்கி வாசிச்சாங்க. இப்போ மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்க!''மித்ரா சொன்னதை ஆமோதித்த சித்ரா, தன் தரப்புத் தகவல்களை விளக்கினாள்...

''சென்ட்ரல் ஆபீஸ்லதான் புரோக்கர்கள் ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியா இருக்குன்னு புகார் குவியுதாம்...அதனால ஆர்.டி.ஓ.,வே, ஆபீசுக்கு வெளியில டேபிள் சேரைப் போட்டு, லைசென்ஸ், ரினிவல் கேட்டு வர்ற எல்லாரையும் அவரே நேரடியா விசாரிச்சு, உடனுக்குடனே வேலைகளை முடிச்சு அனுப்பிர்றாராம். அது மாதிரி மத்தவுங்களும் பண்ணுனா நல்லாருக்கும்!''

''அக்கா! நான் சொன்னதும்சென்ட்ரல் ஆபீஸ் பத்திதான்...அங்க போனா, முக்கியமான ஆபீசரே, அந்த புரோக்கரைப் பாருங்க, இந்த புரோக்கரைப் பாருங்கன்னு அனுப்பி வைக்கிறாராம். மெடிக்கல் சர்ட்டிபிகேட் ஜி.எச்.,லயே வாங்கிட்டுப் போனாலும், அந்த ஆபீஸ்க்கு பக்கத்துல இருக்குற டாக்டர்ட்டதான், சர்ட்டிபிகேட் வாங்கணும்னு அனுப்பி விடுறாங்களாம்!''

''அவருக்கு எவ்ளோ கொடுக்கணுமாம்?''

''அவருக்கு பீஸ் வெறும் 50 ரூபாதான். ஆனா அவர் எந்த டெஸ்ட்டுமே பண்றதில்லை. சர்ட்டிபிகேட் கேட்டுப் போனா, 50 ரூபா வாங்கிட்டு சட்டுப்புட்டுன்னு போட்டுக் கொடுத்துர்றாராம்!''

''எல்லா கவர்மென்ட் ஆபீஸ்கள்லயும் 'சிசிடிவி' வைக்கணும்னு சொல்லிருக்காங்களே...இந்த ஆர்.டி.ஓ., ஆபீஸ்கள்ல அதெல்லாம் வைக்க மாட்டாங்களா?''ஆதங்கத்தோடு கேட்ட சித்ராவுக்கு, ஆதாரத்தோடு விளக்கம் சொல்லத் துவங்கினாள் மித்ரா...''அதெல்லாம் 'இருக்கு ஆனா இல்லை'ங்கிற கணக்குதான்க்கா...எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் 'சிசிடிவி' வச்சிருக்காங்க. ஆனா எப்பிடி 'லாக்கப் டெத்' நடக்குது...பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்கள்ல இந்த கேமராக்கள் பேருக்குதான் இருக்கு... 'ஒர்க்' ஆகுறதில்லை. அப்பிடியே ஆனாலும் அதை அழிக்கிற வசதியும் அவுங்ககிட்டதான் இருக்கு. ஏதாவது வில்லங்கமா நடந்தா, உடனே அதை அழிச்சிர்றாங்க!''

''நம்ம ஊரு காலேஜ்கள்லதான், முதல்ல 'சிசிடிவி' வைக்கணும்...நம்ம கவர்மென்ட் ஆர்ட்ஸ் காலேஜ்ல, கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு புரபசர் மேல ஒரு மாணவி கொடுத்த புகார்ல, அந்த புரபசரை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டாங்களே...இப்போ அதே காலேஜ்ல செந்தமிழில் செப்புகிற ஒரு புரபசர் மேல, லேடி புரபசர் ஒருத்தவுங்க கம்பிளைன்ட் பண்ணிருக்காங்க. உயர்கல்வித்துறை இயக்குனர் விசாரிச்சுப் பார்த்ததுல, தலையில அடிச்சுக்கிற அளவுக்கு கேவலமா என்னென்னவோ நடந்திருக்கு!''சித்ரா சொல்லும்போதே, கோபத்துடன் குறுக்கிட்ட மித்ரா, ''அந்த ஆள் மேல எதுவும் நடவடிக்கை எடுக்கலையா?'' என்று கேட்டாள். உதட்டைப் பிதுக்கி பதிலளித்தாள் சித்ரா...''அந்த விவகாரத்துலரெண்டு லேடி புரபசர், ஒரு மாணவி எல்லாரும் சம்பந்தப்பட்ருக்காங்க...அதனால அமுக்கப் பாக்குறாங்க...''

''சி.எம்.மேட்டர் ஒன்னு சொல்றேன். மேட்டுப்பாளையத்துல நடந்த சி.எம்.வரவேற்புல, அவரோட படம் போட்ட பிளக்ஸ், அட்டைகளை பிடிச்சு வழியில பெரும் கூட்டமா ஆளுக நின்னுருக்காங்க. அந்த பேனர்கள்ல டி.ஆர்.எஸ்.,ன்னு பேரு இருந்திருக்கு. அதைப் பாத்து கடுப்பான 'மாவட்டம்', 'ஆளைக் கூப்பிட்டு வந்தவரு, எங்கேயோ ஒளிஞ்சுக்கிட்டாரு'ன்னு ஓப்பன் மைக்ல பேசிருக்காரு!''

''பேசுனது மட்டுமில்லாம, அந்த பிளக்ஸ், அட்டையெல்லாத்தையும் 'மாவட்டம்' ஆளுங்க பிடுங்கிருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா, அடிதடியாகியிருக்கும்கிறாங்க!''

''அதான் அவுங்க உட்கட்சித் தேர்தல்லயே, அடிதடி அளவுக்கு பிரச்னையாயிட்டு இருக்கே!''

''அதை விட வசூல் வேட்டைதான் ஜோரா நடக்குது. ஒரு வட்டச் செயலாளர்ட்ட மூணு லட்சம் வரைக்கும் பேரம் நடக்குதாம். அதுலயும் குனியமுத்துார் ஏரியாவுல இருக்குற ஒருத்தரு, 'மாவட்டமே என் பாக்கெட்'லன்னு சொல்லிட்டு, செம்ம வசூலைப் போட்டுட்டு இருக்காராம். அ.தி.மு.க.,கோட்டையை அசைக்கிறதுக்காக, புது நிர்வாகிகளை நியாயமா எடுக்கணும்னு புதுக்கோட்டையில இருந்து தேர்தலை நடத்த வந்த சி.எம்., நண்பரை அனுப்பிருக்காங்க. அவரு, வந்த புகாரைப் பாத்துட்டு, பெட்டியைத் துாக்கிட்டே புதுக்கோட்டை போயிட்டாராம்!''

''சிட்டிக்குள்ள இப்பிடி வசூல்ன்னா...அன்னுார் வடக்கு ஒன்றியத்துல கடுமையான போட்டி இருக்குறதால, கிளைச் செயலாளர், மேலமைப்புப் பிரதிநிதிகளுக்கு ஆளுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுத்து ஓட்டு வாங்குறாங்களாம். ஒரு ஆளுக்கு 30 ஆயிரம் ரூபா வர்றதால, உடன் பிறப்புகள் உற்சாகத்துல மெதக்குறாங்களாம்!''

''அங்க உடன் பிறப்புகளுக்கு உற்சாகம்... கலெக்டராபீஸ்ல கார்ப்பரேஷன் பெண் கவுன்சிலர்களோட மாநில மகளிர் ஆணையத் தலைவி நடத்துன கூட்டத்துல, ஏகப்பட்ட தர்ம சங்கடமாம். அவுங்க கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன ஒரு மண்டலத் தலைவரைப் பார்த்து, 'நீ வாயை மூடிட்டு இரு'ன்னு ஒருமையில பேசிருக்காங்க. பெண் மேயருக்கும் அதே மரியாதைதானாம்!''

''மித்து! அமைச்சர் சேகர்பாபு, தன்னோட மனைவியோட வெள்ளியங்கிரி மலை ஏறி இறங்குனதுதான் நம்ம ஊர்லயும், தலைநகரத்துலயும் 'ஹாட் டாபிக்'கா ஓடுது. ரெண்டு பேரும் மொத்தம் 23 மணி நேரம் நடந்திருக்காங்க. உண்மையிலேயே அவரோட வேலையும், எனர்ஜியும் வேற லெவல்தான்...ஏழுமலை ஏறுனவரு அப்பிடியே மருதமலைக்கும் வந்து பார்த்து, அங்க இருக்குற பிரச்னைகளையும் சரி பண்ணுனா நல்லாருக்கும்னு, முருக பக்தர்கள் பேசிக்கிறாங்க!''இதைச் சொல்லி முடித்த சித்ரா,

''ஏ.சி., மேட்டர் ஒன்னு இருக்கு. இப்போ அவசரமாப் போகணும்!'' என்று சொல்லி விட்டு வண்டிச்சாவியை கையில் எடுத்தாள்.வீட்டுக்குச் சென்று அலைபேசியில் அழைத்த சித்ரா, ''மித்து! அந்த ஏ.சி.,மேட்டர்ல பெரிய ஆபீசர்ட்ட, லேடி போலீஸ் கம்பிளைன்ட் பண்ணியிருக்கறது உண்மைதானாம். ஆனா அந்த ஏ.சி.,மேல ஏற்கனவே லஞ்சம் மட்டுமில்லாம, லேடீஸ் புகாரும் இருக்குன்னு தகவல் தெரிஞ்சிருக்கு'' என்று அழைப்பைத் துண்டித்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X