பையேயாங்க்: வட கொரியா ராணுவ உயரதிகாரி இறுதி சடங்கில் பங்கற்ற அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன், அவரது உடலை சுமந்து வந்தார். அதன் புகைபடங்கள், வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது.
வட கொரியாவில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்குமுன் ஒரே நாளில், 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2.6 கோடி மக்கள் தொகை உடைய வட கொரியாவில், காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 17 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கை, 68ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வடகொரியாவின் மூத்த ராணுவ அதிகாரியும், அதிபர் கிம் ஜாங் உன்னின் நெருங்கிய ஆதரவாளருமான ஹியான் ஷால் ஹய் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். வடகொரியாவின் அதிபராக , நாட்டின் தலைவரானக கிம் ஜோங் உருவாகவும் ஹியான் பெரும் பங்காற்றினார். இதையடுத்து ஹியான் மீது கிம் மிகவும் பற்றுகொண்டவராக இருந்தார்.
முகக்கவசத்தை மறந்த கிம் ஜோங்க் உன்
இந்நிலையில் ராணுவ அதிகாரியின் இறுதி சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றஅதிபர் கிம் ஜோங் உன், அவருடன் நூற்றுக்கணக்கான ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள், அரசின் முக்கிய உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர். வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவம் நிலையில் இறுதிச்சடங்க்கு நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து வந்தார் கிம் ஜோங் உன். அப்போது அவர் முகக் கவசம் அணியாமல் பங்கேற்றார். அதன் , வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE