கோவில் மரபுகளில் குறுக்கிடாதீர்! :அரசுக்கு சுப்பிரமணியசாமி எச்சரிக்கை

Added : மே 24, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
''ஹிந்து கோவில்கள் மற்றும் மரபுகளில் தொடர்ந்து தலையிட்டு, சிக்கல்களை ஏற்படுத்த முயலும் தி.மு.க., அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிகூறியுள்ளார். நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:ஒரு பக்கம் ஹிந்து அறநிலையத் துறை வாயிலாக, ஹிந்து கோவில்களுக்கு சிறப்பு செய்வது போல காட்டி கொள்ளும் தி.மு.க., அரசும், அமைச்சர் சேகர்பாபுவும்,
கோவில் மரபுகள், அரசு , சுப்பிரமணியசாமி

''ஹிந்து கோவில்கள் மற்றும் மரபுகளில் தொடர்ந்து தலையிட்டு, சிக்கல்களை ஏற்படுத்த முயலும் தி.மு.க., அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்,'' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமிகூறியுள்ளார். நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:ஒரு பக்கம் ஹிந்து அறநிலையத் துறை வாயிலாக, ஹிந்து கோவில்களுக்கு சிறப்பு செய்வது போல காட்டி கொள்ளும் தி.மு.க., அரசும், அமைச்சர் சேகர்பாபுவும், ஹிந்துக்கள், கோவில்களுக்கு எதிராக செயல்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.


குழப்பம்தமிழகத்தில், தி.மு.க., எப்போது ஆட்சி பொறுப்புக்கு வருகிறதோ, அப்போது ஹிந்து மக்கள் கொச்சைப்படுத்தப்படுவதும், ஹிந்து கோவில்களுக்கு ஆபத்து ஏற்படுவதும் தொடர்ந்து நடக்கிறது.ஆனால், 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்ததால், அந்த எண்ணத்தில் இருந்து மாறுபட்டிருப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. 'அப்படி யாரும் நினைக்க வேண்டாம்; நாங்கள் பழைய தி.மு.க., தான்' என்று சொல்லாமல் சொல்வது போல, தற்போதைய தி.மு.க., ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சி வந்தது முதல், பல ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டன.


latest tamil news


இப்போது, சிதம்பரம் பொது தீட்சிதர்களுக்கு சொந்தமான நடராஜர் கோவிலுக்குள்ளும் புகுந்து குழப்பம் விளைவிக்கின்றனர். அந்த கோவிலுக்குள் பாரம்பரியமாகவும், புனிதமாகவும் கடைப்பிடிக்கப்படும் கனகசபைக்குள் புகுந்து, ஆகமத்தை கெடுத்து, சம்பந்தமில்லாதவர்களை வைத்து பாடல் பாடும் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்திருக்கின்றனர்.உச்ச நீதிமன்றத்துக்கு சென்று போராடி, சிதம்பரம் நடராஜர் கோவிலை, அங்கிருக்கும் பொது தீட்சிதர்களுக்கு சொந்தமானது தான் என, உத்தரவு பெற்று கொடுத்திருக்கிறேன்.அணுகுமுறைஆனாலும், தி.மு.க., அரசு அதை ஏற்க தயாரில்லை. குழப்பத்தை ஏற்படுத்த, ஹிந்து அறநிலைய துறை வாயிலாக தொடர்ந்து முயற்சிக்கிறது. சிதம்பரத்தில் இருக்கும் திராவிட கட்சியினர், விடுதலை புலிகள் ஆதரவாளர்களை, அரசு தரப்பினரே கிளப்பி விட்டுஉள்ளனர். அவர்கள்,தீட்சிதர்களுக்கும், கோவில் நிர்வாகத்துக்கும் எதிராக தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர். இனியும் இந்த விஷயங்களை அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவது, நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடுக்க போகிறேன்.அதற்கு முன், தமிழக அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன். ஹிந்து விரோத அணுகுமுறையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிஇருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.-- நமது நிருபர் --Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G. BALASUBRAMANIAN - New Delhi,இந்தியா
24-மே-202216:09:37 IST Report Abuse
G. BALASUBRAMANIAN சுப்ரமணியம் ஸ்வாமி ஒருவர் மட்டுமே தமிழக ஆளும் கட்சிக்கு இம்மாதிரி அதிரடி சவால் கொடுக்க சாமர்தியமுள்ளவர். இம்மாதிரி அராஜகங்களை ஆஸ்திக மக்கள் பொறுத்துக்கொள்ள முடியாமலும் அதற்கு எதிர்ப்பு தெருவித்து மேல் நடவடிக்கை எடுக்க முடியாத வாயில்லா பூச்சியாக தவித்து மனதுக்குள்ளேயே புழுக்கிக்கொண்டு தவிக்கும் நிலையில் இந்த மட்டுமாவது இவர் ஒருவர் தலைமையிலாவது இம்மாதிரியான கோவில் மரபுகளில் மூக்கை நுழைக்கும் ஆளும் கட்சியின் அராஜக முடிவுகளுக்கு ஒரு பெரிய பூட்டு போட முடியும் என்ற நம்பிக்கை உறுதியாகிறது. முருகனே அவருக்கு அருள் புரிவான்
Rate this:
Cancel
Balram - chennai,இந்தியா
24-மே-202214:58:04 IST Report Abuse
Balram சாத்தான் வேதம் ஓதுவது போலே உள்ளது....
Rate this:
Cancel
24-மே-202214:02:06 IST Report Abuse
ஆரூர் ரங் தில்லை நடராசரையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளப்பது என்னாளோ என கட்டுமரம்😡 பேசியதைக் காதால் கேட்டிருக்கிறேன் .அவர் வழிவந்த கழக குண்டர்கள் செய்வது பீரங்கிக்கு பதில் திருட்டு மூலம் பிழைப்பு. சேகர் பாபு வுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுக்க சரக்கு மிடுக்கு ஆட்களால் தான் முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X