கோவை:முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வைத்து மிரட்டும் கணவரான போலீஸ் எஸ்.ஐ., மீது நடவடிக்கை கோரி, மனைவி கோவை கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் எஸ்.ஐ., ஆக பணியாற்றி வருபவரின் மனைவி, கோவை கலெக்டரிடம் அளித்த மனு:எனக்கும் கணவருக்கும் கடந்தாண்டு ஜூன் 13ல் திருமணம் நடந்தது. கணவர் வீட்டில் வசித்தோம். திருமணம் ஆன முதல் நாளிலேயே என்னிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டார். 14 நாள் என்னுடன் குடும்பம் நடத்தி விட்டு, கோவை சென்று வருவதாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு எந்த தொடர்பும் இல்லை. போனை 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டார்.இந்நிலையில் கணவரின் பெண் நண்பர் என்று கூறி, என்னிடம் ஒரு பெண் அசிங்கமாக பேசினார். நானும், கணவரும் தனிமையில் இருந்த விவரத்தை சொல்லி கேலி செய்து சிரித்தார். எனது நிலை பற்றி, என் தாயார் வந்து மாமனார் குடும்பத்தினரிடம் கேட்டார்.
அப்போது அவர்கள், 'எங்கள் மகனுக்கு ஜாதகம் சரியில்லை. அதை சரி செய்வதற்காக உங்கள் மகளை திருமணம் செய்தோம். என் மகனை ஏதாவது தரச் சொல்கிறோம். வாங்கிக்கொண்டு, மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடு' என்று கூறி விட்டனர்.அதன் பிறகு போன் செய்த கணவர், 'ரொம்ப ஆசைப்படக்கூடாது. சத்தம் போடாமல் யாரையாவது திருமணம் செய்து கொள். இல்லையெனில் முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதை வெளியிட்டு உன்னை சாகடித்து விடுவேன்' என்று மிரட்டினார். கணவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருக்கும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE