திருப்பூர்:திருப்பூரில் தாய் மற்றும் இரு குழந்தைகள் அடித்து கொலை செய்யப்பட்டனர்.திருப்பூர் அருகே வாவிபாளையம் - சேடர்பாளையத்தில் ஒரு வீட்டில், 35 வயதுடைய பெண், இரு சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரித்தனர். பிரேதங்களை கைப்பற்றிய போலீசார், ஆம்புலன்சை வரவழைத்து அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர்.கொலை நடந்த வீட்டில், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.போலீசார் கூறியதாவது:திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துமாரி, 35. மகன்கள் தர்ணீஷ், 9, நிதிஷ், 6. மூவரும் இரு வாரங்களுக்கு முன் வாடகைக்கு குடிவந்துள்ளனர். அவர்களும், 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் வசித்து வந்தார். நேற்று அதிகாலையில் முத்துமாரிக்கும், அந்நபருக்கு இடையே தகராறு நடந்துள்ளது.சிறிது நேரத்தில் அந்நபர் சென்று விட்டார். அதன்பின், பெண் மற்றும் குழந்தைகள் வெளியே வராததால், வீட்டு உரிமையாளர் பத்மாவதி சென்று பார்த்தபோது மூவரும் சடலங்களாக கிடந்தது தெரிந்தது. விரிவான விசாரணைக்கு பின் பிற விபரங்கள் தெரியவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE