சிறைக்கு குண்டு மிரட்டல்: திருப்பூர் நபருக்கு வலை| Dinamalar

சிறைக்கு குண்டு மிரட்டல்: திருப்பூர் நபருக்கு வலை

Added : மே 24, 2022 | |
கோவை:கோவை மத்திய சிறைக்கு குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை மத்திய சிறைக்கு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு போன் அழைப்பு வந்தது. சிறைக்காவலர் மருது பாண்டியன் போன் எடுத்தார். அதில் பேசிய நபர், 'சிறையை குண்டு வைத்து தகர்த்து விடுவேன்' என மிரட்டல் விடுத்தார்.இது பற்றி ஜெயிலர் சிவராஜன், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். எஸ்.ஐ.,

கோவை:கோவை மத்திய சிறைக்கு குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை மத்திய சிறைக்கு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு போன் அழைப்பு வந்தது. சிறைக்காவலர் மருது பாண்டியன் போன் எடுத்தார். அதில் பேசிய நபர், 'சிறையை குண்டு வைத்து தகர்த்து விடுவேன்' என மிரட்டல் விடுத்தார்.
இது பற்றி ஜெயிலர் சிவராஜன், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். எஸ்.ஐ., விக்னேஷ் விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், திருப்பூர் பிச்சம்பாளையம் பிரிவு, ஜே.ஜே.நகரை சேர்ந்த நாகராஜ், 38, என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் கடந்தாண்டு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டவர். சிறையில் அடைக்கப்பட்டவர், ஒரு மாதத்துக்கு முன் விடுதலையாகியுள்ளார்.மதுவுக்கு அடிமையான அவர், போதையில் இருந்தபோது சிறைக்கு குண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X