மக்கள் தொகை கணக்கெடுப்பு மின்னணு முறைக்கு மாறுகிறது

Updated : மே 24, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முழுக்க முழுக்க மக்களின் பங்களிப்புடன் இது நடத்தப்பட உள்ளது.நாட்டின் மக்கள் தொகை குறித்த கணக்கெடுப்பு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இதன்படி, 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியானது.இதைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணி, 2020ல் துவங்க
மக்கள் தொகை, கணக்கெடுப்பு மின்னணு முறை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முழுக்க முழுக்க மக்களின் பங்களிப்புடன் இது நடத்தப்பட உள்ளது.
நாட்டின் மக்கள் தொகை குறித்த கணக்கெடுப்பு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இதன்படி, 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியானது.இதைத் தொடர்ந்து, 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணி, 2020ல் துவங்க இருந்தது.


latest tamil newsகொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால், மக்கள் தொகை கணக்கெடுப்பை துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை முழுக்க முழுக்க மின்னணு முறையில் மேற்கொள்வது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையை தொடர்ந்து, புதிய முன்னோடி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2023 ஜன., 1ல் துவக்கப்பட உள்ளது. வழக்கமாக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும். இதனால் அதிக நேரம் மற்றும் செலவு ஏற்படுகிறது. இதில், சில குறைபாடுகளும் உள்ளன.அதனால், மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியாக, 'மொபைல் ஆப்' உருவாக்கப்படும். அதன் வாயிலாக மக்கள் தங்களுடைய
தகவல்களை பதிவு செய்யலாம்.

இந்த தகவல்கள் ஆதாருடன் இணைக்கப்பட உள்ளன. இதனால், மோசடி செய்வது தடுக்கப்படும். இதற்கான முன்னோட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த மின்னணு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து, ஜூலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த அமித் ஷா திட்டமிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்புக்காக, 8,000 கோடி ரூபாயை
மத்திய அரசு ஒதுக்க உள்ளது.இந்த முன்னோடி திட்டம் நடைமுறைக்கு வந்தால், உலகிலேயே மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் முதல் நாடாக இந்தியா விளங்கும்.
- புதுடில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
govondarajan - mecca,பஹ்ரைன்
24-மே-202216:30:30 IST Report Abuse
govondarajan 8000 கோடி எவனக்கோ வாய்க்கரிசி இப்படி ஆப் தயாரிச்சே கொள்ளை அடிக்கிறானுங்க ADMKபீரியடில் பஞ்சாயத்து வரி வசூல் ஆப் இப்ப வேலை செய்யலை அவன் கமிஷன் வாங்கிகிட்டு போயிகிட்டேன் , இவன் தனியா கமிஷனுக்குபுது ஆப் போடுறான் எல்லா கச்சி பசங்களும் APP திருடர்கள் .
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
24-மே-202213:13:09 IST Report Abuse
Balaji எல்லாத்துக்கும் ஆப்பா? வேண்டாத வேலை? ஒருமுறை நான் என்னைப்பற்றி தகவல் தர எதற்கு ஆப்? ஏதாவது ஒரு இணைய தளத்தில் பதிவு செய்வது போல செய்துவிட்டு போகலாம்.. அரசை தொழில்நுட்பத்திற்க்கான வழிகாட்டிகள் தவறான செயல்முறைகளை கற்றுத்தருகிறார்களோ என்று சந்தேகம் எழுகிறது.. ஆரோகிய சேது என்னவாயிற்று? அதனை இதற்க்கு பயன்படுத்த முடியாதா?
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
24-மே-202215:47:34 IST Report Abuse
Saiஅரசை தொழில்நுட்பத்திற்க்கான வழிகாட்டிகள் தவறான செயல்முறைகளை கற்றுத்தருகிறார்களோ என்று சந்தேகம் எழுகிறது.. நச்சென்று அடிக்கிறார் பல காலமாக இதுதான் நாட்டின் தலைவிதி என்ன செய்ய? ப்ராத் மிக்கில் பெயிலானவன் வீட்டுத் திண்ணையில் இவ்விடம் இந்தி கற்றுத் தரப்படும்னு ஒரு அட்டையில் சாக் பேச்சால் எழுதி தொங்க விட்டான் அவன் நேரம் மாணவர எண்ணிக்கை நாலைந்து பேர் என்றது இருபதை எட்டியது காலப்போக்கில் தானும் முன்னேறி ஊரில் அவனை விட்டால் இண்டிமாஸ்டர் வேறு ஆளில்லைனு பேர்வாங்கிட்டான்...
Rate this:
Cancel
jayaraman -  ( Posted via: Dinamalar Android App )
24-மே-202210:49:08 IST Report Abuse
jayaraman பிறப்பு சான்றிதழ் வழங்கும் போதே ஆதார் கார்டு வழங்க வேண்டும். இறப்பு சான்றிதழ் வழங்கும் போதே, ஆதார் கார்டை நீக்க வேண்டும். இப்படி செய்தால் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு சமமாகுமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X