குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க மாநகராட்சிக்கு கிடைத்தது 'கிரீன் சிக்னல்'

Updated : மே 24, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை: கோவையில் சேகரமாகும் குப்பையில் மின்சாரம் தயாரிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது; இதற்கு தமிழக அரசு 'கிரீன் சிக்னல்' வழங்கியதால், அடுத்தகட்ட பணிகளில், அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் குப்பை சேகரமாகிறது. உருவாகும் இடத்திலேயே அழிக்க, பல்வேறு முயற்சி மேற்கொண்டாலும், கோடிக்கணக்கில் செலவழித்தாலும் அதன் பயன் உருப்படியாக

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: கோவையில் சேகரமாகும் குப்பையில் மின்சாரம் தயாரிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது; இதற்கு தமிழக அரசு 'கிரீன் சிக்னல்' வழங்கியதால், அடுத்தகட்ட பணிகளில், அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.



latest tamil news




கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் குப்பை சேகரமாகிறது. உருவாகும் இடத்திலேயே அழிக்க, பல்வேறு முயற்சி மேற்கொண்டாலும், கோடிக்கணக்கில் செலவழித்தாலும் அதன் பயன் உருப்படியாக இருப்பதில்லை.வெள்ளலுார் கிடங்கில் குவிந்துள்ள பழைய குப்பையை, 'பயோமைனிங்' முறையில் அழிக்கவும் பெருந்தொகையை செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குப்பையில் மின்சாரம் தயாரித்து, இதற்கு நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் ஹைதராபாத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவதாக தகவல் கிடைத்ததால், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


latest tamil news




இன்னும், 10 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிட்டால், குப்பை உருவாக்கமும் அதிகரிக்கும் என்பதால், ஓரிடத்தில் தேக்குவதற்கு பதிலாக, உடனுக்குடன் அழிக்கும் வகையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நாளொன்றுக்கு, 850 டன் குப்பை சேகரமாகிறது. தனியார் நிறுவனம், 650 டன் வரை கையாள்கிறது. மீதமுள்ள, 200 டன் கிடங்கில் திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. அதை தவிர்க்க, மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போதுமானதாக இருக்காது என கருதினால், வெள்ளலுார் சுற்றுப்பகுதியை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளில் சேகரமாகும் குப்பையையும் கணக்கிட்டு, மின்சாரம் தயாரிக்க ஆலோசனை நடந்து வருகிறது. தமிழக அரசு அனுமதி வழங்கி விட்டதால், அடுத்தகட்ட பணிகளுக்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டிருக்கின்றன' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
24-மே-202209:30:41 IST Report Abuse
Girija அடித்தது மாநகராட்சி அதிகாரர்களுக்கு லக்கி ப்ரைஸ் ..........
Rate this:
Cancel
Krishnan - Bengaluru,இந்தியா
24-மே-202207:51:59 IST Report Abuse
Krishnan மிகவும் பயனுள்ள ஆக்கபூர்வமான திட்டம். கோயம்புடூரில் சாலை முழுவதும் சேரும் தினசரி குப்பைகளின் அளவு சொல்லிமாளாது. குப்பையிலிருந்து மின்சாரம் கிடைக்கிறதோ இல்லையோ, குப்பைகள் அழிக்கப்படும் என்பதை கேட்கவே சந்தோசம்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
24-மே-202207:22:59 IST Report Abuse
Fastrack அமெரிக்காவில் மூணு குப்பை தொட்டிகளில் கழிவுகளை சேகரித்து வைக்க வேண்டும் ரீசைக்கிள் செய்யக்கூடியவை தாவர கழிவுகள் திரவ கழிவுகள் எல்லாமே தனி தனியாக வண்டிகளில் எடுத்து செல்லப்பட்டு உரங்கள் மின்சாரம் போன்றவை தயாரிக்கப்படுகின்றன கண்ணாடி பல்புகள் பெயிண்டுகள் மருத்துவ கழிவுகள் தனியாக சேகரிக்கப்படுகின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X