விஸ்மயா தற்கொலை வழக்கு: கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

Updated : மே 24, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
கொல்லம் :கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஸ்மயா தற்கொலை வழக்கில், அவரது கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதமும் விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொல்லத்தில், ஆயுர்வேத மருத்துவ மாணவியாக இருந்த
மருத்துவ மாணவி, தற்கொலை, இன்று, தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொல்லம் :கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விஸ்மயா தற்கொலை வழக்கில், அவரது கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதமும் விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கொல்லத்தில், ஆயுர்வேத மருத்துவ மாணவியாக இருந்த விஸ்மயா, கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், வரதட்சணை கேட்டு கணவர் கிரண்குமார் தன்னை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறி, அவர் 'வாட்ஸ் ஆப்'பில் படங்களுடன் உறவினர்களுக்கு தகவல் அனுப்பிஇருந்தார்.


latest tamil news



இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, கிரண்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில், கிரண்குமார் குற்றவாளி என, நேற்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.12.5 லட்சம் அபராதமும் விதித்து கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து, விஸ்மயாவின் தந்தை கூறியதாவது:இரண்டு ஆண்டுகளுக்கு முன், விஸ்மயா திருமணத்தில், 100 சவரன் நகை, ஒரு நிலம், கார் ஆகியவற்றை வழங்கினேன்.கார் வேண்டாம், 10 லட்சம் ரூபாய் வேண்டும் எனக் கேட்டு, கிரண்குமார் என் மகளை கொடுமைப்படுத்தி, தற்கொலைக்கு துாண்டியுள்ளார். இப்போது, என் மகளுக்கு நீதி கிடைத்துள்ளது. புலனாய்வு அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை.இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
25-மே-202201:27:40 IST Report Abuse
Akash Kozhuppu?
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
24-மே-202217:24:49 IST Report Abuse
R S BALA இந்த கோர்ட் சொல்லிடிச்சு தண்டனையை .. மேல்முறையீடு கோர்ட் நல்லா ஜாரிச்சு விடுதலை பண்ணிடும்..
Rate this:
Cancel
mukundan - chennai,இந்தியா
24-மே-202217:12:42 IST Report Abuse
mukundan சாவதற்கு பதில் போலீசில் வரதட்சிணை கொடுமை புகார் கொடுத்து இருக்கலாம். இவனுக்கு தண்டனையும் கிடைத்து இருக்கும், இந்த பெண்ணிற்கு வாழ ஒரு வழி கிடைத்து இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X