கருணாநிதி பிறந்தநாள் சேவல் சண்டைக்கு அனுமதி மறுப்பு

Added : மே 24, 2022 | |
Advertisement
மதுரை : உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த மனு:மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மைட்டான்பட்டியில் சேவல் சண்டை நடத்த உள்ளோம். அனுமதி, பாதுகாப்பு அளிக்கக்கோரி மதுரை கலெக்டர், எஸ்.பி.,கள்ளிக்குடி போலீசில் மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு



மதுரை : உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த மனு:
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மைட்டான்பட்டியில் சேவல் சண்டை நடத்த உள்ளோம். அனுமதி, பாதுகாப்பு அளிக்கக்கோரி மதுரை கலெக்டர், எஸ்.பி.,கள்ளிக்குடி போலீசில் மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அப்துல் குத்துாஸ், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பு, 'மனு நிராகரிக்கப்பட்டது,' என தெரிவித்தது.
நீதிபதிகள்: நிராகரித்த உத்தரவை எதிர்த்து சட்டத்திற்குட்பட்டு மனுதாரர் மனு செய்து கொள்ளலாம். மனு பைசல் செய்யப்படுகிறது என்றனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X