ராமஜெயம் கொலை வழக்கு கள்ளக்குறிச்சியில் போஸ்டர்| Dinamalar

ராமஜெயம் கொலை வழக்கு கள்ளக்குறிச்சியில் போஸ்டர்

Added : மே 24, 2022 | |
கள்ளக்குறிச்சி : அமைச்சரின் சகோதரரை கொலை செய்த குற்றவாளிகளைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர், கடந்த, 2012 மார்ச் 29ம் தேதி அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை
ராமஜெயம் கொலை வழக்கு கள்ளக்குறிச்சியில் போஸ்டர்



கள்ளக்குறிச்சி : அமைச்சரின் சகோதரரை கொலை செய்த குற்றவாளிகளைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர், கடந்த, 2012 மார்ச் 29ம் தேதி அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிந்த நிலையில், இதுவரை கொலை குற்றவாளிகள் பற்றிய துப்பு கிடைக்கவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளைத் தேடும் பணி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நேற்று காலை போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், திருச்சி பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கடத்திக் கொலை செய்யப்பட்டது குறித்து குற்றவாளிகளை பற்றி சரியாக தகவல் அளிப்பவருக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.துப்பு கொடுப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் எனவும், மொபைல் எண் மற்றும் இ-மெயில் ஐ.டி.,யும் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X