சென்னை : 'குடிநீர் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு, ஜன., 1 முதல் வழங்க வேண்டிய, 14 சதவீதம் அகவிலைப்படியை, உடனடியாக வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தில், ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, 14 சதவீத அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்துள்ளனர். இதுபோன்று சலுகைகளை பறித்து, சாதனை படைப்பது தான், 'திராவிட மாடல்' போலும். சலுகைகள் பறிக்கப்படுவதை, ஒருபோதும் ஏற்க முடியாது. தி.மு.க.,அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு, அ.தி.மு.க., கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
குடிநீர் வாரியத்தில் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்களுக்கான, 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வை, ஜன., 1 முதல் உயர்த்தி வழங்க வேண்டும்.பிற வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், இதுபோன்று வழங்கப்படாமல் இருந்தால், அவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். இதுபோன்ற தவறான முன்னுதாரணத்தை, இனி வருங்காலங்களில் ஏற்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE