விழுப்புரம் - காட்பாடிக்கு பயணிகள் ரயில் இயக்கம்| Dinamalar

விழுப்புரம் - காட்பாடிக்கு பயணிகள் ரயில் இயக்கம்

Added : மே 24, 2022 | |
விழுப்புரம் : விழுப்புரத்தில் இருந்து காட்பாடிக்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் போக்குவரத்து நேற்று துவங்கியது.கொரோனா பாதிப்பு காரணமாக விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் போக்குவரத்து, இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், விழுப்புரம் - காட்பாடி ரயிலை இயக்க தென்னக ரயில்வே அனுமதியளித்துள்ளது.அதன்படி, காட்பாடி ரயில் நிலையத்தில்



விழுப்புரம் : விழுப்புரத்தில் இருந்து காட்பாடிக்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பயணிகள் ரயில் போக்குவரத்து நேற்று துவங்கியது.

கொரோனா பாதிப்பு காரணமாக விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் போக்குவரத்து, இரண்டு ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், விழுப்புரம் - காட்பாடி ரயிலை இயக்க தென்னக ரயில்வே அனுமதியளித்துள்ளது.அதன்படி, காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5:15 மணிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு காலை 9:10 மணிக்கு வந்தது. இதை தொடர்ந்து, மீண்டும் நேற்றிரவு 7:05 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு சென்றது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X