கம்பம்: கம்பம் பகுதியில் பாசன வாய்க்கால் மடைகளை பராமரிக்க பள்ளம் தோண்டி பணிகள் செய்யாமல் பொதுப்பணித்துறையினர் முடங்கியுள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கு முல்லைப்பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதற்கென கம்பம் பள்ளத்தாக்கில் சின்னவாய்க்கால், பாளையம் பரவு வாய்க்கால், உத்தமுத்து வாய்க்கால் உள்ளிட்ட 17 வாய்க்கால்கள் உள்ளன. இந்த வாய்க்கல்களில் நூற்றுக்கணக்கான மடைகள் உள்ளன. வழக்கமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால், மடைகள் கதவுகள் இன்றியும்,பலமிழந்தும் உள்ளன.
முதல் போக நெல் சாகுபடிக்கு ஜுன் முதல் வாரம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதற்காக மிக மோசமாக உள்ள மடைகளை சரிசெய்ய பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்தது. 20 நாட்களுக்கு முன்பு கம்பம் சாமாண்டியம்மன் கோயிலிற்கு தெற்கு பகுதி மடைகள் எண் 9, 12, 13 உள்ளிட்ட பல மடைகளை பராமரிப்பு பணி துவங்கப்பட்டது. ஒவ்வொரு மடைக்கு முன்பும் பள்ளம் தோண்டினர். ஆனால் பணிகள் தொடரவில்லை.
முதல் போக சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்க உள்ளனர். ஆனால் பொதுப்பணித்துறை பராமரிப்பு பணி செய்யவில்லை. எனவே தோண்டிய பள்ளங்களையாவது சீரமைக்க கம்பம் விவசாயிகள் சங்கம் கேட்டு கோரியுள்ளனர்.