மத்திய அரசு இரு தவணைகளாக எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசுக்கும் மதிப்புக்கூட்டு வரியை குறைக்க வேண்டிய கடமை உண்டு. அதனால் மாநில அரசும் பெட்ரோல், டீசல் வரிகளைக் குறைத்து மக்களின் சுமையை போக்க முன்வர வேண்டும். - ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன. இதனால் தமிழகமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே லிட்டருக்கு பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 8, டீசல் மீதான கலால் வரி ரூ. 6 வீதமும் மத்திய அரசு குறைத்துள்ளது வரவேற்கத்தக்கது.- விஜயகாந்த், தே.மு.தி.க., தலைவர்
ஊட்டி சென்ற முதல்வர் ஸ்டாலின் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளன்று அவரது கொலை தொடர்பாக சிறையில் இருக்கும் 6 பேரை விடுவிப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இருப்பது தேவையற்றது. இது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது.- வாசன், த.மா.கா., தலைவர்
ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே. உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது? நீங்கள் அனுப்பிய ராணுவத்தால் எங்கள் நாடே ரத்தமாக ஓடியதே. அதற்கு என்ன சொல்வது? நடந்த தவறுக்கெல்லாம் தொடக்கம் யாரென்று தனியாக இருந்து யோசியுங்கள். உண்மை புரியும்.- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE