பாரம்பரியமான கைத்தறி நெசவுக்கு உதவிக்கரம் கிடைக்குமா?

Updated : மே 24, 2022 | Added : மே 24, 2022 | |
Advertisement
உடுமலை:நுால் விலை உயர்வால், ஆர்டர்கள் குறைந்து, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கைத்தறி ரகங்கள் விற்பனையை ஊக்குவித்து தொழிலாளர்கள் பிரச்னைக்கு அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கிராமங்களில், பாரம்பரிய நெசவுத்தொழில் தொடரும்.உடுமலை மலையாண்டிப்பட்டணம், குரல்குட்டை, வாளவாடி, பூளவாடி உள்ளிட்ட கிராமங்களில், முன்பு கைத்தறி நெசவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

உடுமலை:நுால் விலை உயர்வால், ஆர்டர்கள் குறைந்து, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கைத்தறி ரகங்கள் விற்பனையை ஊக்குவித்து தொழிலாளர்கள் பிரச்னைக்கு அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கிராமங்களில், பாரம்பரிய நெசவுத்தொழில் தொடரும்.

உடுமலை மலையாண்டிப்பட்டணம், குரல்குட்டை, வாளவாடி, பூளவாடி உள்ளிட்ட கிராமங்களில், முன்பு கைத்தறி நெசவு பிரதானமாக இருந்தது. ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.கைத்தறியில் உருவாகும் சேலை உள்ளிட்ட ஆடைகளே அனைவரின் மங்கள நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பிடித்து வந்தன.



latest tamil news




திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், மணப்பெண்ணுக்கான சேலை நெசவு செய்ய, உள்ளூர் நெசவாளர்களிடம், முன்பணம் வழங்குவது ஒரு சடங்காகவே பின்பற்றப்பட்டு வந்தது.இவ்வாறு, முக்கியத்துவம் வாய்ந்த தொழில், கால மாற்றத்தால், பல்வேறு பாதிப்புகளை சந்தித்தது. இருப்பினும், பல்வேறு போராட்டங்களுக்கு இடையே பாரம்பரியத்தை கைவிடாமல், பல கிராமங்களில், நெசவாளர்கள் கைத்தறி நெசவை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.


நுால் விலையால் சிக்கல்



உடுமலை பகுதியிலுள்ள நெசவாளர்களுக்கு தற்போது 'கோரா' பட்டுச்சேலை நெசவே, வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. வியாபாரிகளிடம் இருந்து, நுால் வாங்கி, கூலிக்கு, சேலை நெசவு செய்து வருகின்றனர்.நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நெசவு செய்தால் மட்டுமே, ஒரு சேலையை முழுவதுமாக நெய்து முடிக்க முடியும்.

இப்பணியில், நாளொன்றுக்கு, நெசவாளர்களுக்கு, சராசரியாக, 400 ரூபாய் அளவுக்கே கூலி கிடைக்கிறது.அதிலும், மாதத்துக்கு, 10 சேலைக்கு மேல் ஆர்டர் கிடைத்தால் மட்டுமே, குடும்ப செலவினங்களை, சமாளிக்க முடியும். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, பட்டு நுால் விலை உயர்வால், சேலை நெசவுக்கான ஆர்டர்கள் பாதித்து, நெசவாளர்களுக்கு அடிப்படை செலவுக்கான வருவாய் கிடைப்பதே கேள்விக்குறியாகியுள்ளது. இப்பிரச்னையால், உடுமலை சுற்றுப்பகுதியில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news




இது குறித்து, மலையாண்டிபட்டணம் நெசவாளர் தீபன்மூர்த்தி கூறியதாவது:
கைத்தறி நெசவு தொழில் எங்கள் தலைமுறைக்கு பிறகு, தொடருமா என தெரியவில்லை. அந்தளவுக்கு இத்தொழில் பாதிப்புகளை சந்தித்து வருகிறது; நெசவாளர்களின் பிரச்னைகள் முழுமையாக அரசின் கவனத்துக்கு செல்வதில்லை.பெருந்தொற்று ஊரடங்கின் போது, நெசவாளர்கள், பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். அதன்பின்னர் பலர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது பட்டுச்சேலை நெசவு மட்டுமே எங்களுக்கு கைகொடுக்கிறது.

அதிலும், நுால் விலை உயர்வால் சிக்கல் உருவாகியுள்ளது. கைத்தறி ரகங்கள் அனைத்தும், அனைத்து வித வரிகளையும் அரசு ரத்து செய்தால், எங்களுக்கு கூடுதலாக ஆர்டரும், சீரான வருவாயும் கிடைக்கும்.கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த, அரசு பல்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும். விசைத்தறி ரகங்களை, கைத்தறி ரகம் என அடையாளப்படுத்தி, விற்பனை செய்கின்றனர்.இவ்வாறு, நுால் விலை, விற்பனை சரிவு என அனைத்து விதமான பிரச்னைகளும் நேரடியாக, கைத்தறி நெசவாளர்களையே பாதிக்கிறது. பாரம்பரியம் மிக்க இத்தொழில் முற்றிலுமாக காணாமல் போகும் முன், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.


அழிந்து போன பாவடிக்கல்!


நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களை அடையாளப்படுத்தும் வகையில், கிராம எல்லையில், பாவடிக்கல் காணப்படும். நெசவுக்கு முன், நுாலுக்கு வண்ணமேற்றி, அதில் முறுக்கு இல்லாத வகையில், சீர்படுத்தவே 'பாவடிக்கல்' பயன்படுத்தப்பட்டு வந்தது.பாவடி வீதி, பாவடி நிலம் என அழைக்கப்பட்ட இப்பகுதிகள் அனைத்தும் கிராமங்களில் மாயமாகி விட்டது. தற்போது பட்டு நெசவுக்கு தேவையான 'பாவு' வியாபாரிகளால், நேரடியாக வழங்கப்படுகிறது.எனவே, பாவடிக்கல் பயன்பாடு இல்லாமல், கைவிடப்பட்டு, அவை காட்சிப்பொருளாகி விட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X