'வாட்ஸ் ஆப்'பில் வெளியான விருப்ப மாறுதல் பட்டியல்

Added : மே 24, 2022 | |
Advertisement
கரூர் மாவட்டத்தில், பணியாற்ற விரும்புவதாக ஏ.டி.எஸ்.பி., முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான, பட்டியல், 'வாட்ஸ்ஆப்'பில் வெளியாகியுள்ளது. இதனால், தற்போது குறிப்பிட்ட இடங்களில், பணியில் உள்ள போலீசார், கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.கரூர் மாவட்ட போலீசாரின், 'வாட்ஸ்ஆப்'பில் பரபரப்பாக ஒரு பட்டியல் பரவி வருகிறது. அதில், கரூர் மாவட்டத்தில் பணியாற்ற விரும்புவதாக, கன்னியாகுமரி


கரூர் மாவட்டத்தில், பணியாற்ற விரும்புவதாக ஏ.டி.எஸ்.பி., முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான, பட்டியல், 'வாட்ஸ்ஆப்'பில் வெளியாகியுள்ளது. இதனால், தற்போது குறிப்பிட்ட இடங்களில், பணியில் உள்ள போலீசார், கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
கரூர் மாவட்ட போலீசாரின், 'வாட்ஸ்ஆப்'பில் பரபரப்பாக ஒரு பட்டியல் பரவி வருகிறது. அதில், கரூர் மாவட்டத்தில் பணியாற்ற விரும்புவதாக, கன்னியாகுமரி ஏ.டி.எஸ்.பி., வேல்முருகன், டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, திருவாரூர் டி.எஸ்.பி., தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர்கள் கவுசர் நிஷா, விதுன் குமார், ஓம்பிரகாஷ், சரவணன், ஸ்ரீதர், ஜெயராமன், வெங்கடேசன், முகமது ஜாபர், பார்த்த சாரதி, பிரகாஷ், நெப்போலியன் ஆகியோர்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல், கரூர் மாவட்டத்திலிருந்து, வெளி மாவட்டங்களுக்கு, விருப்ப மாறுதலில் செல்லும் பட்டியலில், போலீஸ் எஸ்.ஐ.,க்கள் அழகுராம், ராஜசேர்வை, சரவணன், போலீஸ் ஏட்டுக்கள் சக்திவேல், ஆனந்தகுமார், லோகநாதன், ரங்கநாதன் சுந்தர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதனால், குறிப்பிடப்பட்ட இடங்களில் பணியாற்றி வரும், போலீசாரும், வெளிமாவட்டங் களுக்கு விருப்ப மாறுதல் பட்டியலில் உள்ள போலீசாரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: 'வாட்ஸ் ஆப்'பில் வெளிவந்துள்ள, கரூர் மாவட்டத்தில் பணியாற்ற விரும்புவோர் பட்டியலில், 14 பேரும், வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோர் பட்டியலில், எட்டு பேரின் பெயர்களும் உள்ளன. இந்த போலி பட்டியல் எப்படி வந்தது, யார் தயாரித்தது என்பது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இது ஒரு போலியான பட்டியல். இதனால், பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கும், தற்போது பணியில் உள்ளவர்களுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X