ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவரான மாதேஸ்வரன் மகள், நந்தினி என்ற பாரதி - ஸ்ரேயஸ் திருமணம் கடந்த, 20ல் நடந்தது. அவர்களது திருமண வரவேற்பு, ஓசூர் மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தி.மு.க., இளைஞரணி மாநில செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி, மணமக்களை வாழ்த்தினார். அதேபோல், அமைச்சர்கள் காந்தி, கணேசன், மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளரான எம்.எல்.ஏ., பிரகாஷ், கிழக்கு மாவட்ட செயலாளர்
செங்குட்டுவன், எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், ராமச்சந்திரன், மாநகராட்சி மேயர் சத்யா, காங்.,-எம்.பி., செல்லக்குமார், முன்னாள் எம்.பி., சுகவனம், தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, ஹில்ஸ் ஓட்டல் இயக்குனர் அழகரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக, உதயநிதி எம்.எல்.ஏ.,வுக்கு ஆளுயர மாலை அணிவித்து, கவுன்சிலர் மாதேஸ்வரன், அவரது மகன் சேரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE