ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 42.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. அதன்படி, கல்லாவி பஞ்.,ல் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், போர்வெல் அமைக்கும் பணி, அனுமன்தீர்த்தம் அண்ணாநகரில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, சிங்காரப்பேட்டை போலீஸ் எதிரே, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிறு பாலம் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
மேலும், கோவிந்தாபுரம் பஞ்., பால்காரன் கொட்டாய், எக்கூர் பஞ்., சாமாட்சி கொட்டாய், கீழ்மத்துார் பஞ்., காரப்பட்டு பஞ்., வளத்தானுார், உப்பாரப்பட்டி பஞ்., ஆகிய பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு, ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார். அவருடன், அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE