தரிசு நிலத்தை தொகுப்பு சாகுபடிக்கு மாற்றி விவசாயிகள் பயன்பெறலாம்| Dinamalar

தரிசு நிலத்தை தொகுப்பு சாகுபடிக்கு மாற்றி விவசாயிகள் பயன்பெறலாம்

Added : மே 24, 2022 | |
பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட குட்டூரில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்ட துவக்கவிழா நடந்தது. பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்து, விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், வேளாண் இடுபொருட்கள் மற்றும் மருந்து தெளிப்பான் கருவிகளை வழங்கினார்.விழாவை துவக்கி வைத்து, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:தமிழகத்தில்


பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட குட்டூரில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்ட துவக்கவிழா நடந்தது. பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் முன்னிலை வகித்து, விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், வேளாண் இடுபொருட்கள் மற்றும் மருந்து தெளிப்பான் கருவிகளை வழங்கினார்.
விழாவை துவக்கி வைத்து, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:
தமிழகத்தில் ஊராட்சிகள் முழு ஆற்றலுக்கேற்ப வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை அரசு துவக்கியுள்ளது. தரிசு நிலங்களை தொகுப்பாக சாகுபடிக்கு கொண்டு வருதல், பாசன நீர் ஆதாரங்களை உருவாக்குதல், சூரிய மின்சக்தி மோட்டார்களை தொகுப்பு நிலங்களில் அமைத்தல், நுண்ணீர் பாசனம் அமைத்தல், வேளாண் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல், கால்நடை நலன்காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகளவு பயிர் கடன்கள் வழங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற திட்டப்பணிகளும் இதில் அடங்கும். தரிசு நில மேம்பாடு, பயிர்கள் உற்பத்தி பெருக்குதல், மானாவாரி சாகுபடியை மேம்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தபட உள்ளன.
இவ்வாறு, அவர் பேசினார்.
வேளாண் துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து
கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X