வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டோக்கியோ: ஜப்பானில் நடந்து வரும் குவாட் மாநாட்டில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சந்தித்து பேசினர்.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 'குவாட் மாநாடு' ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நம் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார்.இந்த மாநாட்டிற்கு இடையில் மோடியும், பைடனும் அமர்ந்து பேசினர். இந்த பேச்சில் இரு நாட்டு உறவு மேலும் வலுப்பெறும் என்று இரு தலைவர்கள் உறுதி அளித்தனர். இந்திய, அமெரிக்க உறவு வலுப்பெற தொடர்ந்து நம்பிக்கையின் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியா வெளிப்படையாகவும் , திறந்த மனதுடனும் இருப்பதாக மோடி தெரிவித்தார்.

கோவிட் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் பணிகள் சிறப்பானதாக இருந்ததாக அதிபர் பைடன் பாராட்டினார்.
இந்த சந்திப்பில் உக்ரைன் போர் குறித்து விவாதிக்கப்பட்டதாக பைடன் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE