70 வீடுகளுக்கு பட்டா வழங்க கலெக்டர் ஆபீசில் மனு

Added : மே 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
'பட்டா வழங்காமல் உள்ள, 70 வீடுகளுக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.இதுகுறித்து திருச்செங்கோடு அருகே கவுண்டம்பாளையம் இந்திராநகரில் வசிப்பவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:அரசின் அனுமதியுடன், இந்திரா நகரில், 270 வீடுகளில் வசித்து வருகிறோம். அதிகாரிகள், அந்த இடத்தை அளந்து, பாதை புறம்போக்கு என்று


'பட்டா வழங்காமல் உள்ள, 70 வீடுகளுக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திருச்செங்கோடு அருகே கவுண்டம்பாளையம் இந்திராநகரில் வசிப்பவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசின் அனுமதியுடன், இந்திரா நகரில், 270 வீடுகளில் வசித்து வருகிறோம். அதிகாரிகள், அந்த இடத்தை அளந்து, பாதை புறம்போக்கு என்று தெரிவித்தனர். அதனால், நத்தம் என பட்டா மாற்றி வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். அவர்களில், 200 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 70 வீடுகளுக்கு மட்டும் பட்டா வழங்கவில்லை. நாங்கள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டா வழங்காமல் உள்ளவர்களுக்கு, விரைந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
24-மே-202214:47:27 IST Report Abuse
a natanasabapathy Uzhaikkaamal osileye anaithaiyum adainthuvida thudikkinranar
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X