தமிழர்களை சுரண்டி ஆடம்பரம், உல்லாசம்: சீமானை சிதறவிடும் பெண் எம்.பி.,

Updated : மே 25, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
கரூர்: ‛கரூர் தொகுதி மக்கள், சீமான் போன்று அப்பாவி இலங்கை தமிழ் மக்களையும், தமிழக மக்களையும் சுரண்டி, ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழ்பவர்கள் கிடையாது' என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராஜிவ் முன்னாள் பிரதமர் என்றும் பாராமல் சீமான் பேசியதற்கு பதில்
Jothimani, Congress, Seeman, NTK, சீமான், நாதக, காங்கிரஸ், பெண் எம்பி, ஜோதிமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கரூர்: ‛கரூர் தொகுதி மக்கள், சீமான் போன்று அப்பாவி இலங்கை தமிழ் மக்களையும், தமிழக மக்களையும் சுரண்டி, ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழ்பவர்கள் கிடையாது' என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராஜிவ் முன்னாள் பிரதமர் என்றும் பாராமல் சீமான் பேசியதற்கு பதில் தெரிவித்திருந்தேன். நடிகை விஜயலக்ஷ்மி ஆதாரத்தோடு சீமான் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதையே தான் நான் சீமான் பாலியல் குற்றவாளி என கூறினேன். ஆனால், தனிப்பட்ட முறையில் என்னை வக்கிர புத்தியுடன் தாக்கும் நோக்கத்தோடு பேசுகிறார். அவர் பாலியல் குற்றவாளி இல்லை என நேர்மையானவராக இருந்தால் நீதிமன்றத்தை நாடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கலாம்.

பெண்கள் மீது ஆபாச தாக்குதல், அவதூறு பரப்பினால் என்னை போன்ற பெண்களை அரசியலை விட்டு விரட்டலாம் என்று சீமான் போன்றவர்கள் நினைக்கிறார்கள். இந்த மாதிரியான தாக்குதல்கள் எனக்கு புதிதல்ல, பா.ஜ., கட்சியிலும் எனக்கு தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது. கரூர் தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு ஓட்டளித்ததாக பேசிய சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.


latest tamil news


எவ்வித சமரசமும் செய்துக்கொள்ளாமல் களத்தில் நின்று அரசியல் செய்த என் மீது அன்பால் நல்ல வேட்பாளரான என்னை மக்கள் ஏற்றுள்ளனர். கரூர் தொகுதி மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் அனைவரும் உழைத்து, நேர்மையாக வாழ்பவர்கள். சீமான் போன்று அப்பாவி இலங்கை தமிழ் மக்களையும், தமிழக மக்களையும் சுரண்டி, ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழ்பவர்கள் கிடையாது. கரூர் மக்களை பற்றி பேச சீமானுக்கு அருகதை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.ANNADURAI - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
29-மே-202212:41:15 IST Report Abuse
S.ANNADURAI சகோதரி ஜோதிமணி சொல்வது முற்றிலும் உண்மை. தமிழ், திராவிடம் என்று தமிழ் மக்களை ஏமாற்றியது போதும் உங்கள் பொழப்புக்கு வேறு வேலை தெரிந்தால் செய்யுங்கள் திரு செந்தமிழ் செல்வ சீமான் அவர்களே
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
27-மே-202207:34:31 IST Report Abuse
Darmavan எல்லாவற்றுக்கும் காரணம் ஒருவன் வசீகர பேச்சை நம்பும் மூட வாக்காளர்கள். மேகப் போடும் நடிகையை அழகி என்று நம்புவது போல்தான். சீமான் என்னும் சீமானும் ஒரு திருடன். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை யோக்கியன் போல் நடிக்கிறான்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
25-மே-202211:42:55 IST Report Abuse
M  Ramachandran இதேல்லாம் அரசியலில் சக ஜமப்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X