பழநி: பழநியில் வீடுகள் பல விடுதிகளாக மாறுவதாக, பழநி நகராட்சி கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
பழநி நகராட்சி அவசர கூட்டம் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் கந்தசாமி, நகராட்சி கமிஷனர் கமலா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் விவாதம்: சாகுல் ஹமிது (தி.மு.க.,): வரிகள் சீர் ஆய்வின்போது வீட்டு மனை கட்டடத்திற்கு சொத்து வரி, மீதமுள்ள இடங்களுக்கு காலிமனை வரி நிர்ணயிக்க வேண்டும்.
காந்தி (வருவாய் அலுவலர்) : அளவீடு செய்யும் போது காலி மனை குறித்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்.சுரேஷ் (தி.மு.க.,): பழநியில் சொத்துவரி, தொழில்வரி அதிகம் செலுத்துபவர் விவரங்கள் தெரிவிக்க வேண்டும். தீனதயாளன் (தி.மு.க.,): பழநி கோயில் செலுத்த வேண்டிய வரி பாக்கியை உடனடியாக வசூல் செய்ய வேண்டும். கமிஷனர் : கோயில் வரி பாக்கியை வசூல் செய்ய கடிதம் அனுப்பி உள்ளோம். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீனதயாளன் (தி.மு.க.,): கோயில் வரி பாக்கியை வசூல் செய்யும் வரை பொதுமக்களிடம் வரி பாக்கியை செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது.காளீஸ்வரி (தி.மு.க.,: கோயில்வரி பாக்கியை வசூல் செய்வதை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டும்.தீனதயாளன் (தி.மு.க.,): அடிவாரத்தில் வீடுகள் விடுதிகளாக செயல்படுகின்றன அவற்றை கணக்கிட வேண்டும், சாகுல் ஹமீது (தி.மு.க.,): 1989ல் விதிவிலக்கு அளிக்கப்பட்ட வரி செலுத்தாமல் உள் வீடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். வருவாய் அலுவலர் : மறுசீராய்வில் அளவிடும்பணியின்போது அவை சரி செய்யப்படும்.சுரேஷ் (தி.மு.க.,) : புதிய வரிகள் பெயர் மாற்றம் செய்வதை நிறுத்தி வைக்கக்கூடாது.வருவாய் அலுவலர் காந்தி: புதிய வரிகள் பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.இவ்வாறு விவாதம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE