அரசு பணிக்கு கமிஷன் கேட்ட பஞ்சாப் அமைச்சர் உடனே கைது: ஆம்ஆத்மி கட்சி நடவடிக்கை

Updated : மே 25, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
சண்டிகர்: அரசு பணி ஒப்பந்தங்களுக்கு தனக்கு ஒரு சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும் என கேட்ட பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அரசு பணி ஒப்பந்தங்களுக்கு தனக்கு ஒரு சதவீதம் கமிஷன் வேண்டும் என அமைச்சர் விஜய் சிங்லா
Punjab Minister, Vijay Singla, arrest, Punjab CM,   Health Minister, Punjab minister sacked,corruption charges , Punjab anti-corruption model

சண்டிகர்: அரசு பணி ஒப்பந்தங்களுக்கு தனக்கு ஒரு சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும் என கேட்ட பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: அரசு பணி ஒப்பந்தங்களுக்கு தனக்கு ஒரு சதவீதம் கமிஷன் வேண்டும் என அமைச்சர் விஜய் சிங்லா கேட்டுள்ளார். இது தொடர்பாக புகார் வந்ததால், விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைத்ததால், விஜய் சிங்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்திய வரலாற்றில் இரண்டாவது முறையாக, ஊழல் புகாருக்கு உள்ளான தனது அமைச்சர் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2015ல் ஊழல் புகார் காரணமாக அமைச்சரை பதவி நீக்கம் செய்து கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து விஜய் சிங்லா மீது வழக்குப்பதிவு செய்த மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக முதல்வர் பக்வந்த் மன் கூறுகையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மியை ஆட்சியில் அமர்த்தி உள்ளனர். அதற்கு ஏற்ப செயல்பட வேண்டியது நமது கடமை. இந்திய தாய்க்கு, கெஜ்ரிவால் போன்ற மகனும், பக்வந்த் மன் போன்ற வீரர்களும் உள்ளனர். ஊழலுக்கு எதிரான போர் தொடரும். ஊழலை அடியோடு ஒழிப்போம் என கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார். ஒரு சதவீத ஊழலுக்கு கூட இடம்இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் பக்வந்த் மன் கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
26-மே-202211:38:15 IST Report Abuse
sankar இதெல்லாம் மார்க்கெட்டிங் டெக்னீக் - அடிக்கிற மாதிரி & அழுவுரமாதிரி - ஆனா வலி இருக்காது - கெஜ்ரி மிக சிறந்த ஏமாற்று பேர்வழி
Rate this:
Cancel
25-மே-202209:19:49 IST Report Abuse
தேவதாஸ், புனே பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். முந்தைய டெல்லி தேர்தலுக்கு முன்னர் மூன்று முறை எந்த காரணமும் கெஜ்ரிவால் துபாய் சென்று வந்ததாக கேள்வி......
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
25-மே-202200:25:42 IST Report Abuse
Samathuvan லஞ்ச ஒழிப்பு துறை எவ்வளவு கமிசன் வாங்கியதோ? ஹரே ராமா. என்ன, நான் சொல்லுவதை கேட்க உனக்கும் கமிஷன் வேணுமா. ஓம் ஆதிபரா சக்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X