வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டாவோஸ்: சர்வதேச நிதிப் பற்றாக்குறை காரணமாக பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாமென ஐஎம்எப் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் உலக வர்த்தக மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் சர்வதேச நிதி அமைப்பின் முதல் துணைத் நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: மத்திய வங்கியின் இலக்கைக் காட்டிலும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. உக்ரைன்-ரஷ்ய போர் காரணமாக உலக வர்த்தகம் பாதிப்படைந்துள்ள நிலையில் பங்குச் சந்தை நிரவரத்தையும் அது கடுமையாக பாதிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச வங்கியில் ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை பணவீக்கத்தை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் உலக வங்கி கணித்ததைக் காட்டிலும் தற்போது பணவீக்கம் அதிகரித்து உள்ளது.

சர்வதேச நிதி அமைப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. சர்வதேச நிதி வளர்ச்சி விகிதம் 3.6 சதவீதம் என கணிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 4.4 சதவீதம் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது பணவீக்கம் காரணமாக வளர்ச்சி குறைந்துள்ளது இந்த கணிப்பின் மூலம் தெளிவாகிறது. நிதிப்பற்றக்குறை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE