சென்னை: திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்ல உள்ளதாக அவரது மகனும், நடிகருமான சிம்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், மேல்சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இதனை உறுதிப்படுத்திய நடிகர் சிம்பு, இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‛எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, அனைவரின் அன்புக்கும் நன்றி,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE