கந்து வட்டி கும்பலால் தம்பதி அடித்துக் கொலை

Updated : மே 24, 2022 | Added : மே 24, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே, கந்து வட்டி பிரச்சனையால் கணவன்- மனைவியை அடித்துக்கொலை செய்து ஏரிக்கால்வாயில் வீசி விட்டு சென்றது கந்து வட்டி கும்பல். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரிக்கால்வாய் ஓரத்தில், ஆண், பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரக்கோணம் தாலுகா போலீசார் உடல்களை கைப்பற்றி
கந்துவட்டி கும்பல், அடித்துக்கொலை, தம்பதி, கணவன் மனைவி, காஞ்சிபுரம்,

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே, கந்து வட்டி பிரச்சனையால் கணவன்- மனைவியை அடித்துக்கொலை செய்து ஏரிக்கால்வாயில் வீசி விட்டு சென்றது கந்து வட்டி கும்பல். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைலாசபுரம் ஏரிக்கால்வாய் ஓரத்தில், ஆண், பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அரக்கோணம் தாலுகா போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், காஞ்சிபுரம் மாவட்டம், அரசன் தாங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் மாணிக்கம், 51. அவரது மனைவி ராணி, 47. இருவரும் நெசவுத் தொழிலாளர்கள். மகள் சசிகலாவுக்கு திருமணமாகிவிட்டது. தந்தை வீட்டில் தங்கியிருந்து தனியார் கல்லுாரியில் செவிலியர் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

மகன் பெருமாள் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதலாமாண்டு வெல்டர் படித்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக மாணிக்கம், காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கந்து வட்டி கும்பலிடம் 2 லட்சம் ரூபாயை கடந்தாண்டு கடனாக வாங்கியுள்ளார். அசலையும், வட்டியையும் கட்டாததால், கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் நேற்று மாலை மாணிக்கம், ராணியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து, கைலாசபுரம் ஏரிகால்வாய் ஓரம் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
24-மே-202219:50:47 IST Report Abuse
sankar அந்த நாசகார நபர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளுங்க சார்
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
24-மே-202219:48:57 IST Report Abuse
chennai sivakumar வேறு எதாவது காரணம் இருக்கும்
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25-மே-202206:25:08 IST Report Abuse
Sanny வட்டியும் இல்லை, முதலும் இல்லை . இனி கம்பி எண்ணிக்கொண்டு இருக்கணும்....
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
24-மே-202219:21:13 IST Report Abuse
GMM திராவிட மாடலில் கந்துவட்டி பிரிவு. ? திமுக ஆட்சிக்கு வந்த பின் குற்றம் புரிய அச்சம் நீங்கியது.? விவசாயி மூலம் காங்கிரஸ், நெசவாளி மூலம் திமுக, தொழிலாளர் மூலம் கம்யூனிஸ்ட் அரசியல் வளர்ச்சி கண்டு அதிகாரம் பெற்ற பின் அந்த மக்களை மறந்தனர். நெசவு, தச்சு.. போன்ற வேலைக்கு முன்பு மின்சாரம், பெட்ரோல், டீசல் வேண்டாம். அந்நிய செலாவணி இழப்பு இல்லை. மனித உழைப்பு மட்டும். அரசுக்கு வருவாய். நாட்டில் கடன் இல்லை. அன்று வாழ வைத்த மக்கள் கந்து வட்டி கும்பல் மூலம் கொல்லப்படும் போது, அரசின் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்குவோம். வேதனை படுவது தவிர, நம்மால் என்ன செய்ய முடியும்?
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
25-மே-202206:28:29 IST Report Abuse
Sanny Gmm ஜி. திராவிடமொடல் அல்ல எல்லா அரசியல்வாதிகளும் தங்கள் ஊழல் பணத்தை கருப்புப்பணம்மாக்கி, அதை அடியாட்கள் மூலம் கந்து வட்டிக்கு கொடுக்கிறார்கள். இப்படி அடித்துக்கொலை செய்தால், பெரிய தொகை வாங்கிய மற்றவர்களும் பயப்படுவார்க என்று கொலை செய்திருக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X