வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால், டி.ஆர்.பாலுவிடம் கேட்க வேண்டும்.. தெரியாமல் சில முண்டங்கள் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க.,வின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது. அதில் பேசிய தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்து சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார்.. 'முன்னாள் முதல்வர் அண்ணாதுரையை பற்றி, ஆன்மிக சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் தவறாக பேசினார். அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? அவர் வெளியில் எங்குமே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. 'அதே போன்ற நிலை தான், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும் ஏற்படும்' என அவர் பேசியது பா.ஜ.,வில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமீபத்தில் அவர் பேசிய மற்றொரு வீடியோ மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தி.மு.க.,வின் ஓராண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: திமுக.,வின் தேர்தல் அறிக்கையை டி.ஆர்.பாலு தான் தயார் செய்தார். தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றாமல் ஏதாவது விட்டுப் போய் இருந்தால், அதை அவரிடம் தான் போய் கேட்க வேண்டும். அவர் வீட்டு முன்பு தான் சென்று மறியல் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, தெரியாமல் சில முண்டங்கள் ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேட்க வேண்டிய ஆள் டி.ஆர்.பாலு தான். இவ்வாறு அவர் பேசினார். அவரது இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE