வளி மண்டலம் என்பது, பூமியின் மேற்பரப்பைச் சுற்றியுள்ள காற்றுப்பகுதி. காற்று நிறைந்திருக்கும் எல்லாப் பரப்புகளிலும் ஓர் அழுத்தம் இருக்கும். அவ்வகையில், நீருக்குள் கற்களைப் போடும்போது அதனுடன் காற்றும் சேர்ந்தே உள்ளே செல்கிறது. அக்காற்றே நீருக்குள் இருந்து குமிழியாக வெளிவரும். சில கற்களில் சிறு நுண் துளைகள் இருக்கும். நீருக்குள் செல்லும்போது அத்துளைகளில் உள்ள காற்று வெளியேறுவதாலும் குமிழ்கள் தோன்றக்கூடும். இது போல அலைகள் வட்ட வடிவமாக வெளிநோக்கிச் செல்லும். இவை ஈர்ப்பு அலைகள் எனப்படுகின்றன.
தகவல் சுரங்கம்: தைராய்டு தினம்
உலகில் 20 கோடி பேர் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பு. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதி மையத்தில் அமைந்திருக்கும். உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது உடலில் உள்ள திசுக்கள், செல்கள், மூளை, இதயம் போன்றவை இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது. இப்பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மே 25ல் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.