இதே நாளில் அன்று| Dinamalar

இதே நாளில் அன்று

Added : மே 24, 2022 | |
மே 25, 2013 மதுரையில் சவுராஷ்டிரா பிராமண குடும்பத்தில், டி.ஏ.மீனாட்சி அய்யங்கார் - வெங்கட்டம்மா தம்பதிக்கு மகனாக, 1923 மார்ச் 24ல் பிறந்தவர் டி.எம்.சவுந்தரராஜன். இளமையில், காரைக்குடி ராஜாமணியிடம் இசைப்பயிற்சி பெற்று, கச்சேரிகளில் பாடினார். இயக்குனர் சுந்தர்ராவ் நட்கர்னி, தன் கிருஷ்ண விஜயம் படத்தில், 'ராதே நீ என்னை விட்டு' என்ற பாடலை பாட வாய்ப்பளித்தார்.அடுத்து,
இதே நாளில் அன்று


மே 25, 2013


மதுரையில் சவுராஷ்டிரா பிராமண குடும்பத்தில், டி.ஏ.மீனாட்சி அய்யங்கார் - வெங்கட்டம்மா தம்பதிக்கு மகனாக, 1923 மார்ச் 24ல் பிறந்தவர் டி.எம்.சவுந்தரராஜன். இளமையில், காரைக்குடி ராஜாமணியிடம் இசைப்பயிற்சி பெற்று, கச்சேரிகளில் பாடினார். இயக்குனர் சுந்தர்ராவ் நட்கர்னி, தன் கிருஷ்ண விஜயம் படத்தில், 'ராதே நீ என்னை விட்டு' என்ற பாடலை பாட வாய்ப்பளித்தார்.

அடுத்து, மந்திரி குமாரி, தேவகி என படப்பாடல் வாய்ப்புகள் குவிந்தன. சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி உள்ளிட்டோருக்கு, தனித்தனி பாணியில் பாடி, ரசிகர்களின் மனக்கண்ணில் கதாநாயகர்களை பதிய வைத்து, டி.எம்.எஸ்., ஆனார்.இவர், திரைப்பாடல், பக்திப்பாடல், தனிப்பாடல் என, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

தமிழை சுத்தமாக உச்சரித்த டி.எம்.எஸ்.,சுக்கு, 'கலைமாமணி, பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. 'நீராரும் கடலுடுத்த' எனும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய, இவரின் கடைசி பாடலாக, 'செம்மொழியான தமிழ் மொழியாம்…' எனும் செம்மொழி வாழ்த்துப் பாடல் அமைந்தது. காதல், வீரம், துள்ளல், சோகம் எனும் உணர்ச்சிகளை, தன் குரலால் அரை நுாற்றாண்டு ஆண்ட டி.எம்.எஸ்., 2013ல் இதே நாளில், தன், 90வது வயதில் மறைந்தார்.

மாயக்குரலோன் மறைந்த தினம் இன்று!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X