டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 24, 2022 | கருத்துகள் (1) | |
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: கிழக்காசிய தீவு நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகிறது. தைவானை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ராணுவத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்துள்ள போருக்கு ரஷ்யா கடும் விலையை கொடுக்க நேரிடும். இதுபோன்ற சூழ்நிலை சீனாவுக்கும் ஏற்படும். சீனா அத்துமீறினால், தைவானுக்கு ராணுவ ரீதியில் நாங்கள் அனைத்து உதவிகளையும்
'டவுட்' தனபாலு

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: கிழக்காசிய தீவு நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகிறது. தைவானை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ராணுவத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்துள்ள போருக்கு ரஷ்யா கடும் விலையை கொடுக்க நேரிடும். இதுபோன்ற சூழ்நிலை சீனாவுக்கும் ஏற்படும். சீனா அத்துமீறினால், தைவானுக்கு ராணுவ ரீதியில் நாங்கள் அனைத்து உதவிகளையும் செய்வோம்.

டவுட் தனபாலு: இப்படித்தான், 'உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்'னு உசுப்பேத்தி, உசுப்பேத்தியே அந்த நாட்டை ரணகளம் ஆக்கிட்டீங்க... அது முடிஞ்சதும், அடுத்த ஆப்பரேஷனை ஆரம்பிச்சிட்டீங்க போல... எது எப்படியோ... உலகம் அமைதியா இருந்தா, உங்களுக்கு கண்ணை உறுத்திட்டே இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

***

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை: அனைத்து மாநிலங்களும், 'வாட்' வரியை குறைக்க வேண்டும் என, மத்திய அரசு ஏற்கனவே கோரிக்கை வைத்த போதே, புதுச்சேரியில், 7 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது, மத்திய அரசு மீண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளதால், மற்ற மாநிலங்களை விட, புதுச்சேரியில் விலை மிகவும் குறைவாக உள்ளது. மத்திய அரசு போல, மாநில அரசுகளும், வரியை குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

டவுட் தனபாலு: எல்லா எதிர்க்கட்சியினரும் கரடியா கத்தியும், தமிழக அரசு அசைஞ்சு குடுக்கிற மாதிரி தெரியலை... இப்ப; வார இறுதியில, 'சரக்கு' அடிக்க, 'குடி'மகன்கள் புதுச்சேரிக்கு படையெடுக்கிற மாதிரி, அடுத்து பெட்ரோல், டீசல் நிரப்பவும் அங்க போயிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

***

பத்திரிகை செய்தி: ஜம்மு - காஷ்மீரில், பஞ்சாயத்து தலைவரை சுட்டுக் கொன்ற, 'ஹைபிரிட்' எனப்படும், பகுதி நேர பயங்கரவாதியாக இருந்து, மீண்டும் சாதாரண பொதுமக்கள் வாழ்க்கைக்கு திரும்பிய மூவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

டவுட் தனபாலு: கத்தரிக்காய், தக்காளின்னு காய்கறிகள்ல தான், 'ஹைபிரிட்' வகைகள் கேள்விப்பட்டிருக்கோம்... 'ரெகுலர்' பயங்கரவாதிகளே ஆபத்தானவங்க... இதுல, மக்களோடு மக்களா கலந்து நிற்கும் இதுபோன்ற, 'ஹைபிரிட்'களை வேருடனும், வேரடி மண்ணுடனும் கிள்ளி எறிய வேண்டும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

***

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: கிழக்காசிய தீவு நாடான தைவானை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகிறது. தைவானை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ராணுவத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்துள்ள போருக்கு ரஷ்யா கடும் விலையை கொடுக்க நேரிடும். இதுபோன்ற சூழ்நிலை சீனாவுக்கும் ஏற்படும். சீனா அத்துமீறினால், தைவானுக்கு ராணுவ ரீதியில் நாங்கள் அனைத்து உதவிகளையும் செய்வோம்.

டவுட் தனபாலு: இப்படித்தான், 'உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டுவோம்'னு உசுப்பேத்தி, உசுப்பேத்தியே அந்த நாட்டை ரணகளம் ஆக்கிட்டீங்க... அது முடிஞ்சதும், அடுத்த ஆப்பரேஷனை ஆரம்பிச்சிட்டீங்க போல... எது எப்படியோ... உலகம் அமைதியா இருந்தா, உங்களுக்கு கண்ணை உறுத்திட்டே இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X