பதவி கிடைக்குமா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

பதவி கிடைக்குமா?

Added : மே 24, 2022 | கருத்துகள் (1) | |
'எக்குத் தப்பாக கடிவாளம் போட்டு விட்டனரே; இதை யாரிடம் போய் முறையிடுவது...' என்று புலம்புகிறார், காங்கிரஸ் மூத்த தலைவரான அம்பிகா சோனி.காங்கிரசில் சோனியாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்தவர் அகமது படேல்; சோனியாவின் அரசியல் ஆலோசகராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவர் காலமானார். இதையடுத்து, சோனியாவுக்கு நெருக்கமாக செயல்பட்டு வருபவர் தான், அம்பிகா சோனி.
பதவி கிடைக்குமா?

'எக்குத் தப்பாக கடிவாளம் போட்டு விட்டனரே; இதை யாரிடம் போய் முறையிடுவது...' என்று புலம்புகிறார், காங்கிரஸ் மூத்த தலைவரான அம்பிகா சோனி.

காங்கிரசில் சோனியாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்தவர் அகமது படேல்; சோனியாவின் அரசியல் ஆலோசகராக இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவர் காலமானார். இதையடுத்து, சோனியாவுக்கு நெருக்கமாக செயல்பட்டு வருபவர் தான், அம்பிகா சோனி. ராஜ்யசபா எம்.பி.,யாகவுள்ள இவர், ஏற்கனவே மத்திய அமைச்சராகவும் இருந்தார். சமீபத்தில், ராஜஸ்தானில் நடந்த காங்கிரஸ் சிந்தனையாளர் கூட்டத்துக்கு சோனியா விமானத்தில் வந்த போது, அவருடன் வந்த நபர், அம்பிகா சோனி தான். இவரது எம்.பி., பதவிக்காலம் ஜூலையில் முடிவடைகிறது. ஏற்கனவே, பஞ்சாபிலிருந்து ராஜ்யசபாவுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்., படுதோல்வி அடைந்ததால், மீண்டும் அங்கிருந்து அம்பிகாவை, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில், சட்டசபை தேர்தல் களில் காங்., தோல்வி அடைந்துள்ளதால், அம்பிகாவுக்கு மீண்டும் எம்.பி., பதவி கிடைப்பது சிரமம் தான் என, காங்., கட்சியினரே கூறுகின்றனர். மேலும், '70 வயதுக்கு மேலானவர்களுக்கு பதவி கொடுக்கக் கூடாது...' என்றும் காங்கிரசில் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அம்பிகாவுக்கு, 79 வயதாகிறது. 'சோனியாவின் விசுவாசியாக இருந்து என்ன பயன்; மீண்டும் நமக்கு எம்.பி., பதவி கிடைக்காது போலிருக்கிறதே...' என, கண்ணீர் சிந்துகிறார், அம்பிகா சோனி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X