சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'சின்ன வித்தியாசம் தான் இருக்கு!'

Added : மே 24, 2022 | |
Advertisement
சென்னை, தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரியில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தது. இதில் பங்கேற்ற, முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின், காலை எழுந்தது முதல் இரவு வரை, எந்த மாதிரியான புகைப்படங்களை செய்தி நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்று மட்டுமே சிந்திக்கிறார். அவருக்கு,
'சின்ன வித்தியாசம் தான் இருக்கு!'

சென்னை, தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ஏரியில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தது.

இதில் பங்கேற்ற, முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின், காலை எழுந்தது முதல் இரவு வரை, எந்த மாதிரியான புகைப்படங்களை செய்தி நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்று மட்டுமே சிந்திக்கிறார். அவருக்கு, எம்.ஜி.ஆர்., என நினைப்பு.

எம்.ஜி.ஆரோ மன்னாதி மன்னன்; அவர் எப்படி இருந்தாலும் பார்க்கலாம்; இவரை பார்க்க முடியாது' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'எம்.ஜி.ஆருக்கும், இப்ப இருக்கிற அரசியல்வாதிகளுக்கும் சின்ன வித்தியாசம் தான்... அவரு சினிமாவுக்காக வேஷம் போட்டு, வசனம் பேசினாரு... இப்ப இருக்கிறவங்க, மக்கள் முன்னாடி வேஷம் போட்டு வசனம் பேசி ஏமாத்திட்டு இருக்காங்க...' என, 'கமென்ட்' அடிக்க, உடன் வந்தவர், 'சரியா சொன்னீங்க...' என அதை ஆமோதித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X