அமைச்சர்களுக்குள் சிண்டு முடியும் அதிகாரிகள்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அமைச்சர்களுக்குள் 'சிண்டு' முடியும் அதிகாரிகள்!

Added : மே 24, 2022 | |
''சுற்றறிக்கையை அனுப்பினா தானே விபரம் தெரியுமுங்க...'' என, பெஞ்சில் அமர்ந்ததும் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''விபரமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''கொரோனா ஊரடங்கால பல குறு, சிறு நிறுவனங்கள் நஷ்டத்துல நொடிஞ்சு போயிடுச்சுங்க... இவங்க வங்கி கடன் வாங்க, சொத்து ஆவண ஒப்படைப்பு பத்திரம் பதிவு செய்ய, அரசு கட்டண சலுகை அறிவிச்சதுங்க... ''வர்ற டிசம்பர்
அமைச்சர்களுக்குள் 'சிண்டு' முடியும் அதிகாரிகள்!

''சுற்றறிக்கையை அனுப்பினா தானே விபரம் தெரியுமுங்க...'' என, பெஞ்சில் அமர்ந்ததும் பேச்சை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''விபரமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கொரோனா ஊரடங்கால பல குறு, சிறு நிறுவனங்கள் நஷ்டத்துல நொடிஞ்சு போயிடுச்சுங்க... இவங்க வங்கி கடன் வாங்க, சொத்து ஆவண ஒப்படைப்பு பத்திரம் பதிவு செய்ய, அரசு கட்டண சலுகை அறிவிச்சதுங்க... ''வர்ற டிசம்பர் மாசம் வரைக்கும், இந்த கட்டண சலுகையை நீட்டிச்சு அரசாணை பிறப்பிச்சிட்டாங்க... இதுக்கான சுற்றறிக்கையை, ஏப்ரல் மாசமே பத்திரப்பதிவு தலைமை அலுவலகத்துக்கு குடுத்தும், சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பாம கிடப்புல வச்சிருக்காங்க...

''இதனால, தமிழகத்துல இருக்கிற, 575 சார் - பதிவாளர் ஆபீஸ்கள்ல, ஆவண ஒப்படைப்பு பத்திரங்களை பதிவு செய்ய, கட்டண சலுகை அளிக்க அதிகாரிகள் மறுக்கிறாங்க... ஏற்கனவே கஷ்டத்துல இருக்கிற சிறு, குறு வியாபாரிகள், மேலும் நொந்து போயிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

உடனே, ''முதல்வர் ஸ்டாலின் கோவை, ஊட்டிக்கு எல்லாம் போயிட்டு வந்தாருல்லா... அது சம்பந்தமா ஒரு தகவல் சொல்லுதேன்...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''கோவையில, பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வச்சாரு வே... அந்த நிகழ்ச்சிக்கு முதல்வரோட வீட்டம்மா துர்கா கொஞ்சம், 'லேட்'டா தான் வந்தாங்க... ''நுழைவு வாயில்ல, வரவேற்க யாருமில்லாம தனியா நின்னுட்டு இருந்தாங்க... இதைப் பார்த்த மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா ஓடிப் போயி துர்காவை வரவேற்று உள்ளே அழைச்சிட்டு போனாங்க...

''கண்காட்சியை, 30 நிமிஷம் சுத்தி பார்த்துட்டு துர்கா புறப்பட கார்ல ஏறியதும், ஷர்மிளாவை மறக்காம கிட்ட கூப்பிட்டு நன்றி சொல்லிட்டு போனாங்க வே...'' என்றார், அண்ணாச்சி.

''அமைச்சர்களுக்குள்ள சிண்டு முடிச்சு விடறா ஓய்...'' என கடைசி தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.

''யாருங்க அவங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள்ல, பல கோடி ரூபாய் செலவுல வளர்ச்சிப் பணிகள் நடக்கறது... அந்த துறையின் திருச்சியைச் சேர்ந்த, 'மாண்புமிகு'வுக்கு தெரியாமலேயே இதுக்கு அதிகாரிகள், 'டெண்டர்கள்' விட்டுட்டா ஓய்... ''இதனால, எதிர்க்கட்சிக்காரா சட்டசபையில கேட்ட கேள்விக்கு, 'மாண்புமிகு' தப்பு தப்பா பதில் சொல்லி தர்ம சங்கடமா போயிடுத்தாம்... டெண்டர் தகவல்கள் தன் காதுக்கு வராததுக்கு, அந்த மாவட்டத்துக்கு பொறுப்பு வகிக்கற கரூர் 'மாண்புமிகு'தான்னு துறையின் முக்கிய புள்ளிக்கு தகவல் கிடைச்சிருக்கு ஓய்...

''இதனால, 'டென்ஷன்' ஆன திருச்சி வி.ஐ.பி., கோவைக்கு வந்து முக்கிய அதிகாரி களுக்கு செமத்தியா, 'டோஸ்' விட்டிருக்கார்... ஏற்கனவே, 'பொறுப்பு' மேல அதிருப்தியில இருக்கற அதிகாரிகள், 'இதான் சாக்கு'ன்னு ரெண்டு அமைச்சர்கள் தரப்புக்கும் இடையில ஒண்ணுக்கு ரெண்டா, 'போட்டு' குடுத்து, குளிர் காய்ஞ்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

அப்போது, கடைக்குள் நுழைந்தவர்களை பார்த்து, ''என்ன ராஜகோபால், சமீரன்... எப்படி இருக்கீய...'' என அண்ணாச்சி நலம் விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X