வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பா.ஜ.,வின் 'பூத்' கமிட்டிகளை பலப்படுத்தும் திட்டத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை(மே 25) துவக்கி வைக்க உள்ளார். வரும் 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக, பா.ஜ., மற்றும் காங்., கட்சிகள் பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்நிலையில், பா.ஜ., பூத் கமிட்டிகளை பலப்படுத்த முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, நாடு முழுதும் உள்ள, 2,300க்கும் மேற்பட்ட லோக்சபா மற்றும் சட்டசபைத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில், 7,500 பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது குறித்த ஆலோசனைகள், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வந்தன.

இதன் தொடர்ச்சியாக, பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் திட்டத்தை, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நாளை காணொலி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பா.ஜ., மாவட்ட தலைவர்கள், பா.ஜ., - எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் இந்த நிகழ்ச்சியில் நட்டாவுடன் கலந்துரையாட உள்ளனர்.
இவர்களிடமிருந்து, கருத்துக்கள், விளக்கங்களை பெற்ற பின், பூத் கமிட்டியை பலப்படுத்தும் பணிகள், ஜூன் 15 முதல் நடக்க உள்ளது. இந்த ஆண்டு, குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், இம்மாநிலங்களில் பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் பணிக்கு, கூடுதல் முக்கியத்துவம் தரப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE