வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை சிந்தாதிரிப் பேட்டையில், பா.ஜ., நிர்வாகி, மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை, சிந்தாதிரிப் பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர், 30. இவர், பா.ஜ.,வின் எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்தார். இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (மே 24) இரவு 7:50 மணிக்கு பாலசந்தர் தனக்கான பாதுகாப்பு போலீஸ்காரர் பாலகிருஷ்ணனுடன், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கர் தெருவிற்கு சென்றார். அங்கு, சிலருடன் பாலசந்தர் பேசிக் கொண்டிருந்த போது, பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கும்பல், பாலசந்தரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
சிந்தாதிரிப்பேட்டை போலீசார், பாலசந்தர் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகள் குறித்து, விசாரித்து வருகின்றனர். பல்வேறு திட்டப் பணிகளை துவங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள் சென்னை வரும் நிலையில் சென்னையின் மையப் பகுதியில், பா.ஜ., நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE