கொடைக்கானலில் ரூ.1.75 கோடியில் சாகச சுற்றுலா; மலர் கண்காட்சி துவக்க விழாவில் அமைச்சர் தகவல்

Added : மே 24, 2022 | |
Advertisement
கொடைக்கானல், : கொடைக்கானல் மன்னவனுாரில் ரூ.1.75 கோடியில் சாகச சுற்றுலா அமைக்கப்படும்,'' என மலர் கண்காட்சி துவக்க விழாவில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 59 வது மலர் கண்காட்சி, கோடை விழாவில் அவர் பேசியதாவது:கொடைக்கானல் மன்னவனுாரில் ரூ.1.75 கோடியில் சாகச சுற்றுலா அமைக்கப்பட உள்ளது. வில்பட்டி சின்னபள்ளத்தில் 1.25 ஏக்கரில்


கொடைக்கானல், : கொடைக்கானல் மன்னவனுாரில் ரூ.1.75 கோடியில் சாகச சுற்றுலா அமைக்கப்படும்,'' என மலர் கண்காட்சி துவக்க விழாவில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 59 வது மலர் கண்காட்சி, கோடை விழாவில் அவர் பேசியதாவது:கொடைக்கானல் மன்னவனுாரில் ரூ.1.75 கோடியில் சாகச சுற்றுலா அமைக்கப்பட உள்ளது.

வில்பட்டி சின்னபள்ளத்தில் 1.25 ஏக்கரில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட உள்ளது. ஹெலிகாப்டரில் சுற்றி பார்க்க 'ஜாய் ரைடு' வசதியும் ஏற்படுத்தப்படும். கேபிள் கார் திட்டம் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா இடங்களில் கூடாரம் (டென்ட்) அமைத்து தங்குவது தெடர்பாக ஒரு மாதத்திற்குள் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படும், என்றார்.வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம்பேசியதாவது: பிரையன்ட் பூங்காவை பராமரிப்பதில் திருப்தி இல்லை. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவில் கூடுதலாக மரங்கள், மலர் செடிகள் நடவு செய்ய வேண்டும்.

5 ஆண்டுகளில் பிரையன்ட் பூங்காவை 17 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். அதன் மூலம் ரூ.5.50 கோடி வருவாய் கிடைத்துள்ளது, என்றார்.கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதாவது: காஷ்மீருக்கு இணையாக உலக அளவில் வெளிநாட்டவர்களை ஈர்த்த இடம் கொடைக்கானல் மட்டும் தான். கருணாநிதி இங்கிருந்து தான் பல படங்களுக்கு கதை, வசனம் எழுதி உள்ளார். புவி சார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு இணையான பூண்டு இந்தியாவிலேயே கிடையாது, என்றார்.உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: கொடைக்கானலுக்கு வர இன்னொரு வழியை உருவாக்காமல் விட மாட்டோம்.

தமிழ்நாடு சுற்றுலா விடுதியை சீரமைக்க வேண்டும். இங்கு கூட்டுறவு கல்லூரி அமைக்க வேண்டும், என்றார்.கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார் . சுற்றுலா இயக்குனர் சந்தீப் நத்துாரி, தோட்டக்கலை இயக்குநர் பிருந்தாதேவி, எம்.பி, வேலுச்சாமி, எம்.எல்.ஏ.,க்கள் காந்திராஜன், செந்தில்குமார், எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர். உதவி சுற்றுலா அலுவலர் சிவராஜ் நன்றி கூறினார்.மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கான கார்னேசன், ஹைட்ரான்ஜியா,

சைப்ரஸ் மலர்களால் செதுக்கப்பட்ட மயில், டைனோசர், சிலந்தி மனிதன், பூண்டு, திருவள்ளுவர் சிலை பயணிகளை கவர்ந்தது. உள் நாட்டு மலர்கள், காய்கறி, பழங்களால் உருவாக்கப்பட்ட சிங்கம், தமிழ் அன்னை, மரங்கொத்தி சிற்பங்களுடன் பல்வேறு துறை சார்ந்த ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன.மலர்க்கண்காட்சி மே 29 வரையும், கோடை விழா ஜூன் 2 வரையும் நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X