'மலர்களிலே பல நிறம் கண்டோம்'; கொடைக்கானல் பயணிகள் குதூகலம்

Added : மே 24, 2022 | |
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானலில் நடந்த மலர் கண்காட்சியில் பூத்துக்குலுங்கிய பல வகையான மலர்களை ரசித்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் இத்தனை மலர்களா என ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.கொடைக்கானலில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி நடத்தப்படும். கொரோனாவால் இருஆண்டுகளாக நடக்கவில்லை. இந்தாண்டு மலர் கண்காட்சி, கோடை விழா நேற்று துவங்கியது. லட்சக்கணக்கான பூச்செடிகளில் பல
'மலர்களிலே பல நிறம் கண்டோம்';   கொடைக்கானல் பயணிகள் குதூகலம்


கொடைக்கானல் : கொடைக்கானலில் நடந்த மலர் கண்காட்சியில் பூத்துக்குலுங்கிய பல வகையான மலர்களை ரசித்த சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் இத்தனை மலர்களா என ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.கொடைக்கானலில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி நடத்தப்படும். கொரோனாவால் இருஆண்டுகளாக நடக்கவில்லை.

இந்தாண்டு மலர் கண்காட்சி, கோடை விழா நேற்று துவங்கியது. லட்சக்கணக்கான பூச்செடிகளில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதை ரசிக்க வெளி மாவட்டம் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். கண்காட்சி முதல்நாளான நேற்று பிரையன்ட் பூங்கா பயணிகளால் நிரம்பி வழிந்தது. கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள் மனம் திறந்ததாவது:


புத்துணர்ச்சி தந்த பூக்கள்


நம்ரதா, குடும்ப தலைவி, மும்பை: கொடைக்கானலுக்கு வருவது இதுவே முதல் முறை. நாங்கள் வந்த நேரம் மலர் கண்காட்சியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பூத்துக்குலுங்கும் பூக்களை பார்த்ததும் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.

லட்சக்கணக்கில் மலர்கள்
அன்பரசி, பள்ளி மாணவி, ஆவடி கொடைக்கானலும் மலர் கண்காட்சியும் எனக்கு முதல் அனுபவம். லட்சகணக்கான மலர்கள் இருப்பதை கண்காட்சி மூலமாக அறிந்து கொண்டேன். சுற்றுலா பயணிகளை கவர விளையாட்டு போட்டிகள் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.

புதிய அனுபவம்
சுபா, குடும்ப தலைவி, திருச்சி மலர் கண்காட்சியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் புதிய அனுபவத்தை கொடுத்தன. மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.

சிறப்பான மலர் சிற்பங்கள்
தேவா, கல்லூரி மாணவர், தேனி மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்கியதை பார்க்க முடிந்தது. மலர்கள், காய்கறி, பழங்களால் செய்யப்பட்ட சிற்பங்கள் சிறப்பாக இருந்தன.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X