கொரோனா இறப்பு மதிப்பீடு; இந்தியா கடும் அதிருப்தி

Added : மே 24, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : நம் நாட்டில், கொரோனாவால் இறந்தவர்கள் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைக்கு, அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா இறப்பை 10 மடங்கு உயர்த்தி, 47 லட்சமாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், உலக சுகாதார நிறுவனத்தின், 75வது பொது சபை கூடியது. இதில், மத்திய சுகாதார துறை
கொரோனா இறப்பு மதிப்பீடு;  இந்தியா கடும் அதிருப்தி


புதுடில்லி : நம் நாட்டில், கொரோனாவால் இறந்தவர்கள் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைக்கு, அரசு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.இந்தியாவில் கொரோனா இறப்பை 10 மடங்கு உயர்த்தி, 47 லட்சமாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், உலக சுகாதார நிறுவனத்தின், 75வது பொது சபை கூடியது.

இதில், மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:இந்தியாவில், கொரோனா இறப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விபரம் அதிருப்தி அளிக்கிறது. இந்த அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக, அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களை உள்ளடக்கிய, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல கவுன்சில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் கையாளும் கொரோனா இறப்பு குறித்த அளவுகோல் சரியல்ல.

அதன் அடிப்படையில் கணக்கிடுவதால், இறப்பு விகிதம் மாறுபடுகிறது. எனவே, 'உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா இறப்பு கணக்கீடு சரியல்ல' எனப்படும் தீர்மானத்தை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல கவுன்சில் நிறைவேற்றியுள்ளது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ கொரோனா இறப்பு தகவலை ஏற்காமல், உலக சுகாதார நிறுவனம் செயல்படுவது கவலை அளிக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
25-மே-202215:41:22 IST Report Abuse
ponssasi உலக பொருளாதார ஆய்வு குழு இந்திய பொருளாதாரம் ஏறு முகத்தில் வலுவான நிலையில் உள்ளதுன்னு சொன்னாங்க அப்ப அதுமட்டும் சரியா?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-மே-202212:40:22 IST Report Abuse
raja திமுகவுக்கும் உண்மைக்கும் என்ன சம்பந்தம் உடன்பிறப்பே...நேற்று கூட உண்மையை கேட்ட நிருபரின் கேள்வி க்கு பதிலளிக்க முடியாமல் அசடு வலிந்து ஓடினார்கள் நமது கணியக்கா.....
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
25-மே-202210:03:25 IST Report Abuse
Tamilan அமேரிக்கா நேட்டோவுக்கு இந்தியா கூஜா தூக்கவில்லை (உக்ரைன் பிரச்சினையில்) என்பதால் தங்கள் ஏஜெண்டுகளை வைத்து ஏதாவது சேற்றை வாரி இறைப்பார்கள். இது எப்போதும் வளர்ந்தநாடுகளால் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டுவரும் பழக்கவழக்கம்தான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X