180 விதிமீறல் கட்டடம்; நாளை விசாரணை

Added : மே 24, 2022 | |
Advertisement
சென்னை : அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள ஜீவன் பீமா நகரில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 216 வீடுகளில், 180 வீடுகளின் உரிமையாளர்களிடம் தலைமை செயலகத்தில் நாளை விசாரணை நடக்க உள்ளது.சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் ஜீவன் பீமா நகர் உள்ளது. இந்த வளாகத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி., வாயிலாக, 944 வீடுகள் கட்டப்பட்டன.இதில், 216 வீடுகளில் விதிகளை மீறி

சென்னை : அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் உள்ள ஜீவன் பீமா நகரில், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட, 216 வீடுகளில், 180 வீடுகளின் உரிமையாளர்களிடம் தலைமை செயலகத்தில் நாளை விசாரணை நடக்க உள்ளது.

சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்தில் ஜீவன் பீமா நகர் உள்ளது. இந்த வளாகத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி., வாயிலாக, 944 வீடுகள் கட்டப்பட்டன.இதில், 216 வீடுகளில் விதிகளை மீறி கூடுதல் அறைகள், தளங்கள் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விதிமீறல் பகுதிகளை இடிக்க சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஜன., 11ல் 'நோட்டீஸ்' அளித்தனர்.

விதிமீறல் பகுதிகளை இடிக்க சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நோட்டீஸ் அளித்ததை எதிர்த்து, 180 வீட்டு உரிமையாளர்கள் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் அளித்து முறையிட்டனர். ஏற்கனவே நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குடன் இந்த மனுக்களும் சேர்க்கப்பட்டன.

இவற்றில், 180 வீட்டு உரிமையாளர்களின் முறையீட்டு மனுக்களை விசாரிக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு, உயர் நீதிமன்றம், ஏப்., 11ம் தேதியன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், 180 வீட்டு உரிமையாளர்களிடம், நேரடி விசாரணை மேற்கொள்ள வீட்டுவசதி துறை முடிவு செய்தது. இதற்காக, நாளை தலைமை செயலகத்தில் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் செயலர் முன் ஆஜராக, 180 வீட்டு உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X