கூட்டுறவு பயிர் கடன்; வங்கிகளுக்கு உத்தரவு| Dinamalar

கூட்டுறவு பயிர் கடன்; வங்கிகளுக்கு உத்தரவு

Added : மே 24, 2022 | |
சென்னை : விவசாயிகளுக்கு பயிர்க் கடன்களை விரைந்து வழங்குமாறு, மாவட்ட கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.சென்னை தவிர்த்து, மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குகின்றன. பிணையம் இல்லாமல், 1.60 லட்சம் ரூபாய் வரையும்; பிணையத்தில், 3 லட்சம் ரூபாய் வரையும் பயிர் கடன்


சென்னை : விவசாயிகளுக்கு பயிர்க் கடன்களை விரைந்து வழங்குமாறு, மாவட்ட கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.சென்னை தவிர்த்து, மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குகின்றன.

பிணையம் இல்லாமல், 1.60 லட்சம் ரூபாய் வரையும்; பிணையத்தில், 3 லட்சம் ரூபாய் வரையும் பயிர் கடன் வழங்கப்படுகின்றன. அதற்கு, 7 சதவீதம் வட்டி. குறித்த அவகாசத்திற்குள் கடனை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.கடந்த, 2021 - 22ம் நிதியாண்டில், 14.48 லட்சம் விவசாயிகளுக்கு, 10 ஆயிரத்து, 292 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிக்காக, முதல்வர் ஸ்டாலின், நேற்று சேலம், மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.

இதையடுத்து, விவசாயிகளுக்கு பயிர் கடன்களை விரைந்து வழங்குமாறு, கூட்டுறவு வங்கிகளுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும், பயிர் கடன்களை விரைந்து வழங்குமாறு, மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பயிர்க் கடன் வழங்க தாமதம் செய்தாலோ, இடையூறு செய்தாலோ, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குனர்களிடம் புகார் அளிக்கலாம்.

அங்கும் தீர்வு கிடைக்கவில்லை எனில், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூடுதல் பதிவாளர்களிடம் புகார்களிடம் தரலாம். புகாருக்கு உள்ளாகும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மேலாண் இயக்குனர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X