இரட்டை கொலை குற்றவாளி 8 ஆண்டுக்கு பின் பிடிபட்டார்

Added : மே 24, 2022 | |
Advertisement
புதுவண்ணாரப்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டையில் மனைவி, மகனை கொலை செய்து, போலீசாருக்கு 'தண்ணி' காட்டி வந்தவர், எட்டு ஆண்டுகளுக்கு பின் ஆந்திராவில் பிடிபட்டார்.சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி., நகர் 14வது பிளாக்கைச் சேர்ந்தவர் குணசுந்தரி, 27. இவரது கணவர் மாரி உடல்நலக்குறைவால்உயிரிழந்தார். இவர்களுக்கு 7 வயதில் மகேஷ்குமார் என்ற மகன் உள்ளார்.கடந்த 2014ல், ஆந்திரா,
இரட்டை கொலை குற்றவாளி 8 ஆண்டுக்கு பின் பிடிபட்டார்

புதுவண்ணாரப்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டையில் மனைவி, மகனை கொலை செய்து, போலீசாருக்கு 'தண்ணி' காட்டி வந்தவர், எட்டு ஆண்டுகளுக்கு பின் ஆந்திராவில் பிடிபட்டார்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி., நகர் 14வது பிளாக்கைச் சேர்ந்தவர் குணசுந்தரி, 27. இவரது கணவர் மாரி உடல்நலக்குறைவால்உயிரிழந்தார். இவர்களுக்கு 7 வயதில் மகேஷ்குமார் என்ற மகன் உள்ளார்.கடந்த 2014ல், ஆந்திரா, சூலுார்பேட்டையைச் சேர்ந்த ராஜ், 40, என்பவரை, குணசுந்தரி இரண்டாவதாக திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின், ராஜ் சொந்த ஊரான சூலுார்பேட்டைக்கு மனைவி குணசுந்தரியை அழைத்து சென்று, ஒரு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார். பின்னர் அவர் குணசுந்தரியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த குணசுந்தரி, ராஜை பிரிந்து, தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகரில் உள்ள தாய் நாகவள்ளி வீட்டில் தங்கினார்.இந்த நிலையில், மீண்டும் குடும்பம் நடத்த வரக்கோரி பலமுறை ராஜ் அவரை அழைத்துள்ளார். ஆனால் குணசுந்தரி மறுத்து வந்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ராஜ், கடந்த 2014ல் குணசுந்தரி மற்றும் 7 வயது மகன் மகேஷ்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்து தலைமறைவானார்.

இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர். ராஜ் மொபைல் போன் பயன்படுத்தாததால், அவரை கண்டுபிடிப்பதில், எட்டு ஆண்டுகளாக போலீசார் திணறி வந்தனர். இதையடுத்து, இணை ஆணையர் ரம்யா பாரதி உத்தரவின்படி, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுந்தரவதனம், திருவொற்றியூர் உதவி ஆணையர் முகமது நாசர் தலைமையில் சிவகுமார், நரசிம்மன், விஜயகுமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

ராஜின் சொந்த ஊரான ஆந்திரா சென்ற தனிப்படை போலீசார், அங்கு ஒரு வாரம் தங்கி அவர் குறித்து விசாரித்து வந்தனர். அப்போது அவர் ஆந்திரா, சத்தியவேடு பகுதியில் தினக்கூலியாக பணியாற்றி வருவது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார், ராஜை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். கடந்த எட்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராஜை, போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X