ரூ.5.56 கோடி ஹெராயின்: உகாண்டா பயணி கைது| Dinamalar

ரூ.5.56 கோடி ஹெராயின்: உகாண்டா பயணி கைது

Added : மே 24, 2022 | |
சென்னை, : வயிற்றுக்குள், 5.56 கோடி ரூபாய் மதிப்பிலான, 79௫ கிராம் ஹெராயினை மறைத்து கடத்தி வந்த, உகாண்டா நாட்டு பயணியை, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் இருந்து, 'ஏர் அரேபியா' விமானம், சென்னை வந்தது. அதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர், போதைப்பொருள் கடத்தி வருவதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அதன்படி,


சென்னை, : வயிற்றுக்குள், 5.56 கோடி ரூபாய் மதிப்பிலான, 79௫ கிராம் ஹெராயினை மறைத்து கடத்தி வந்த, உகாண்டா நாட்டு பயணியை, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் இருந்து, 'ஏர் அரேபியா' விமானம், சென்னை வந்தது. அதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர், போதைப்பொருள் கடத்தி வருவதாக, சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, உகாண்டா நாட்டைச் சேர்ந்த லாபென் எம்பாங்கிரே, 42, என்பவரை, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது வயிற்றுக்குள், 63 பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வெளியே எடுத்து மதிப்பிட்டதில், 5.56 கோடி ரூபாய் மதிப்பிலான, 79௫ கிராம் ஹெராயின் போதைப்பொருள் என்பது தெரிய வந்தது.அதை பறிமுதல் செய்த சுங்கத் துறை புலனாய்வு அதிகாரிகள், லாபென் எம்பாங்கிரேவை கைது செய்து விசாரிப்பதாக, விமான நிலைய சுங்கத் துறை முதன்மை கமிஷனர் கே.ஆர்.உதய்பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X