டி.ஜி.பி.,யிடம் புகார்

Added : மே 24, 2022 | |
Advertisement
சென்னை : விழுப்புரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்ராம் சத்திரியன். இவர், 'ஆன்லைன்' வாயிலாக, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று அனுப்பிய புகார்:பிரதமர் மோடி நாளை, தமிழகம் வருகிறார். இவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல, வி.சி., தலைவர் திருமாவளவன், கம்யூ., மாநில செயலர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர், மத்திய அரசை கண்டித்து, ஒரு வாரம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக


சென்னை : விழுப்புரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்ராம் சத்திரியன். இவர், 'ஆன்லைன்' வாயிலாக, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று அனுப்பிய புகார்:பிரதமர் மோடி நாளை, தமிழகம் வருகிறார். இவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல, வி.சி., தலைவர் திருமாவளவன், கம்யூ., மாநில செயலர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர், மத்திய அரசை கண்டித்து, ஒரு வாரம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பொது அமைதியை சீர்குலைத்து, அசம்பாவிதங்களை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பது போல தெரிகிறது. இவர்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வன்முறையில் ஈடுபட முயற்சி செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X