டில்லிக்கு 6 டன் உலோகம் ரயிலில் கடத்த முயற்சி| Dinamalar

டில்லிக்கு 6 டன் உலோகம் ரயிலில் கடத்த முயற்சி

Added : மே 24, 2022 | |
சென்னை : உரிய ஆவணங்கள் இன்றி, ரயிலில் டில்லிக்கு அனுப்ப முயன்ற, தாமிரம், வெண்கலம், அலுமினியம் ஆகிய பொருட்கள் அடங்கிய, 6 டன் எடை உள்ள 53 மூட்டைகளை, வணிக வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மதுரையில் இருந்து டில்லி செல்லும் நிஜாமுதீன் ரயிலில், அனுமதியின்றி தாமிரம், வெண்கலம் மற்றும் அலுமினிய பொருட்கள் அடங்கிய, 'பார்சல்'கள் அனுப்ப இருப்பதாக, வணிக வரித் துறை


சென்னை : உரிய ஆவணங்கள் இன்றி, ரயிலில் டில்லிக்கு அனுப்ப முயன்ற, தாமிரம், வெண்கலம், அலுமினியம் ஆகிய பொருட்கள் அடங்கிய, 6 டன் எடை உள்ள 53 மூட்டைகளை, வணிக வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மதுரையில் இருந்து டில்லி செல்லும் நிஜாமுதீன் ரயிலில், அனுமதியின்றி தாமிரம், வெண்கலம் மற்றும் அலுமினிய பொருட்கள் அடங்கிய, 'பார்சல்'கள் அனுப்ப இருப்பதாக, வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மதுரை ரயில் நிலையத்தில், வணிக வரி அதிகாரிகள் காத்திருந்தனர்; ஆனால், பார்சல்கள் வரவில்லை. இது குறித்து, சென்னை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. எழும்பூரில் இருந்து டில்லிக்கு, நேற்று காலை ஏராளமான பார்சல்கள் அனுப்ப தயார் நிலையில் இருந்த தகவல் கிடைத்தது. வணிக வரி அதிகாரிகள், அந்த பார்சல்களையும், அதற்குரிய ஆவணங்களையும் ஆய்வு செய்த போது, உரிய அனுமதி பெறப்படவில்லை என்பதும், வரி செலுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:மதுரையில் இருந்து டில்லிக்கு உரிய அனுமதி ஆவணங்கள் இன்றி, பார்சல்கள் அனுப்ப முயன்றனர். ஆனால், அங்கு அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். இது குறித்து தகவல் தெரிந்த முகவர், மதுரையில் இருந்து சென்னைக்கு சாலை வழியாக, பார்சல்களை எடுத்து வந்து, சென்னையில் இருந்து அதே ரயிலில் நேற்று அனுப்ப முயற்சி செய்தார்.

நிஜாமுதீன் ரயில், மதுரையில் புறப்பட்டாலும் சென்னை எழும்பூர் வழியாக தான் டில்லி செல்லும். முன்கூட்டியே தகவல் கிடைத்ததால், அந்த பார்சல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மொத்தம் 53 மூட்டைகளில், 6 டன், அதாவது 6,000 கிலோ எடையிலான தாமிரம், வெண்கலம், அலுமினியம் ஆகிய பொருட்கள் இருந்தன.பொருட்களின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X